பிரித்தானியாவை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தனது மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
55 வயது Robert Peters, பிரித்தானியாவில் Blenheim Roadஇல் வசித்து வரும் கோடீஸ்வரர் ஆவார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி இவர், தனது 7 வயது மகள் சோபியாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
இதனால், இவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது . இது தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில், தனது கவனக்குறைவினால் சோபியா இறந்துவிட்டதாக முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்துள்ளார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, ஏப்ரல் 23ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஒரு மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள வீட்டில் வசித்துவரும் Robert, மூன்று திருமணங்கள் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.