அர­சாங்­கத்தின் தாம­தங்கள் கடும்­போக்­கா­ளர்­களை ஊக்­கு­விக்­கின்­றன ஐரோப்­பிய ஒன்­றிய அர­சியல் பிரிவு தலை­வ­ரி­டத்தில் சம்­பந்தன்!

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் நிறை­வ­டைந்த பின்னர் நீண்­ட­கால தேசியப் பிரச்­சி­னைக்கு தீர்வு காணும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு நிறை­வேற்­றப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­திய எதிர்க்­கட்­சித்­த­லை­வரும்

Capturefதமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் அர­சாங்­கத்தின் தாம­தங்கள் தமிழ் மற்றும் சிங்­கள மக்கள் மத்­தி­யி­லுள்ள கடும் போக்­கா­ளர்கள் தமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்துச் செல்ல உந்­து­சக்­தி­யாக அமை­வ­தா­கவும் குறிப்­பிட்டார்.

இலங்­கைக்­கான ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் அர­சியல் பிரிவுத் தலைவர் கொட்­பி­றிக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்­கு­மி­டையில் விசேட சந்­திப்­பொன்ற நேற்று செவ்­வாய்க்­கி­ழமை கொழும்­பி­லுள்ள எதிர்க்­கட்சித் தலை­வரின் அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது.

இச்­சந்­திப்­பின்­போது தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னைகள் தொடர்பில் ஐரோப்­பிய தூது­வரைத் தெளி­வு­ப­டுத்­திய சம்­பந்தன்,

பயங்­க­ர­வாதத் தடைச் சட்­ட­மா­னது நீக்­கப்­பட வேண்­டி­ய­தொன்­றாகும். இச்­சட்டம் நீக்­கப்­படும் என்று இலங்கை அர­சாங்­க­மா­னது சர்­வ­தேச சமூ­கத்­துக்கு வாக்­கு­றுதி வழங்­கி­யுள்­ளது. இந்தச் சட்­டத்தின் கீழ் கைது­செய்­யப்­பட்டு தடுப்புக் காவலில் உள்­ள­வர்கள் விடு­தலை செய்­யப்­ப­ட­வேண்டும். இந்த விட­யத்தில் இழுத்­த­டிப்­புக்கள் இடம்­பெ­று­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

படை­யி­னரின் பாவ­னை­யி­லுள்ள பொது­மக்­களின் காணிகள் இன்­னமும் மீள­ளிக்­கப்­ப­டாமை எமக்கு அதி­ருப்தி அளிப்­ப­தாக உள்­ளது. மக்கள் தமது சொந்தக் காணி­க­ளையே விடு­விக்­கு­மாறு போராட்­டங்­களில் ஈடு­ப­டு­கின்­றார்கள்.

இதனைக் காலந்­தாழ்த்­து­வது மக்கள் மனதில் விரக்­தி­யையும் ஏமாற்­றத்­தையும் அளிக்­கின்­றது. இம் மக்கள் காலா­கா­ல­மாக தாம் வாழ்ந்து வந்த இருப்­பி­டங்­களை விடு­வித்துத் தரு­மாறு நீண்ட கால­மாகப் போராடி வரு­கின்­றார்கள். இந்த நியா­ய­மான கோரிக்­கையைப் புறந்­தள்ள முடி­யாது.

காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­ல­க­மா­னது தனது செயற்­பா­டு­களை விரை­வாக ஆரம்­பித்து நியா­ய­மான விசா­ர­ணை­களை மேற்­கொண்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உண்மை நிலை­யினை வெளிக்­காட்­ட­வேண்டும்.

நீண்ட நாட்­க­ளாகப் போராட்­டங்­களில் ஈடு­பட்­டு­வரும் இந்த உற­வு­க­ளுக்கு தங்கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை அறியும் உரித்து உண்டு.

அந்த உரி­மை­யினை காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­லகம் நிலை நாட்ட வேண்டும். காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­ல­க­மா­னது காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வுகள் திருப்­தி­ய­டையும் வகையில் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு அவர்கள் மனதில் ஆறு­தலைக் கொண்­டு­வரும் வகையில் செயற்­பட வேண்டும் என்றார்.

இதே­வேளை புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் தொடர்பில் தமது கருத்­துக்­களைத் தெரி­வித்த இரா. சம்­பந்தன், உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல்கள் முடிந்­ததன் பிற்­பாடு இந்த நட­வ­டிக்கை துரி­தப்­ப­டுத்­தப்­பட்டு புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைவு பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு, பின்னர் அது­சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பின் மூலம் மக்­களின் அங்­கீ­கா­ரத்­துடன் நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும்.

இந்த நட­வ­டிக்கை மேலும் தாம­தப்­ப­டுத்­தப்­ப­ட­லா­காது. நீண்­ட­கால தேசியப் பிரச்­சி­னைக்குத் தீர்­வு­காணும் நோக்கில் இவ்­வி­டயம் முன்­னு­ரி­மைப்­ப­டுத்­தப்­பட்டு நிறை­வேற்­றப்­பட வேண்டும். ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற புதிய அர­சி­ய­ல­மைப்­பா­னது நியா­ய­மா­னதும் நிரந்­த­ர­மா­னதும் தமிழ் மக்­க­ளுக்குத் திருப்­தி­ய­ளிக்­கக்­கூ­டிய ஒன்­றா­கவும் இருக்­க­வேண்டும்

இந்த விட­யங்கள் தொடர்பில் அர­சாங்­கத்தின் மந்தகதியிலான செயற்பாடுகள் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள கடும் போக்காளர்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல ஓர் உந்துசக்தியாக அமைகின்றது.

எனவே, இவ்விடயங்கள் தொடர்பில் அரசாங்கமானது முக்கிய கவனஞ் செலுத்தி கருமங்கள் துரிதமாக நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும். அதனைச் செய்வதற்கு சர்வதேச சமூகம் தனது தொடர்ச்சியான பயனுறுதி மிக்க ஈடுபாட்டினை இலங்கை அரசாங்கத்துடன் கொண்டிருக்க வேண்டும் என்றும் கோரியமை குறிப்பிடத்தக்கது.