யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.
மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். பலாலி வீதியில் ஊரெழு பகுதியில் இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்.நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிரே வந்த கெப் ரக வாகனம் ஒன்றுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் 25 வயதான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.