மனிதர்கள் பொதுவாக தமக்கு வரும் அறிகுறிகளை தவிர்த்து அதனை அசட்டையீனம் செய்வது வழக்கம். இது பெரும் ஆபத்தான விளைவுகளில் கொண்டு போய் விடும். எமது உடல் பாதிப்படைந்திருக்கிறது என்பதனை காட்டும் சில முக்கிய அறிகுறிகள் உள்ளது. அதில் மிக முக்கியமான 10 அறிகுறிகளை இங்கே தருகிறோம்.
இவற்றில் ஏதாவது ஒன்று உங்களுக்கு இருந்தால் கூட நீங்கள் உடனே வைத்தியரை நாடுவது நல்லது…
அறிகுறி 1: நெஞ்சில் சளியே இல்லாமல் அடிக்கடி இருமுவது. இந்த இருமல் ஒரு வகையாக இருக்கும். சற்று வித்தியாசமாக இருப்பதோடு, மூச்சு எடுத்துவிடவும் சிரமாக இருக்கும். உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
அறிகுறி 2: உங்கள் உடல் எடை திடீரெனக் குறைவது. வழமையான சாப்பாட்டை உட்கொண்டு வந்தாலும். திடீரென நீங்கள் எடை குறைந்தால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
அறிகுறி 3: நெஞ்சில் லேசாக வலிப்பது(இடது புறமாக) தோழில் நோ, வேலையே செய்யாமல் வியர்ப்பது. லேசான தலை சுற்று அத்தோடு வாந்தி எடுப்பது போல உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. வயதானவர்கள் அஸ்பிரின் மாத்திரை ஒன்றை வீட்டில் வைத்திருப்பது நல்லது.
லண்டனில் ஒரு வயதான மூதாட்டி(80) வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அவருக்கு மேல் உள்ள அறிகுறிகள் தோன்றவே. அவர் உடனே என்.எச்.எஸ் க்கு டெலிபோன் அடித்துள்ளார். வீட்டில் அஸ்பிரின் மாத்திரை இருந்தால் உடனே உட் கொள்ளுங்கள். உங்கள் வீட்டு முன் கதவை விறந்து விட்டு இளைப்பாறுங்கள் என்று அவர்கள் சொல்ல. அவரும் அதுபோல செய்துவிட்டு இளைப்பாறியவேளை , மாரடைப்பு வந்து மயங்கிப் போனார். ஆனால் வைத்தியசாலையில், கண் முழித்தார். அவர் சாப்பிட்ட அஸ்பிரின் மாத்திரை அவரை காப்பாற்றியதோடு, அம்புலன்ஸ் ஆட்கள் வந்தவேளை, அவர்கள் தீ அணைக்கும் படையை அழைத்து கதவை உடைக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. (அதற்கு பல நிமிடங்கள் பிடித்திருக்கும்) கதவு ஏற்கனவே திறந்து இருந்த காரணத்தால், அவர்கள் உடனே உள்ளே போய் முதலுதவி கொடுத்து. அம்மூதாட்டியை வைத்திய சாலை கொண்டு சென்று பிழைக்க வைத்தார்கள். இது உண்மைச் சம்பவம்.
அறிகுறி 4: சாப்பாடு விழுங்க கஷ்டமாக இருத்தல், தொண்டையில் கட்டி அல்லது தடக்குவது போன்ற உணர்வு. இது தொண்டை புற்று நோய்க்கான அறி குறி.அறிகுறி 5: கண்களுக்கு அருகாமையில் தோன்றும் சிறு சிறு கொப்பளங்கள். இவை மிக மிக சிறியவையாக இருக்கும். கண்ணின் கரு வளையங்களில் இவை தோன்றும். இது தோன்றினாலே உடலில் கொலஸ்ரோல் மிக மிக அதிகமாகி விட்டது என்பது அர்த்தம். உடனே வைத்தியரை அணுகி கொலஸ்ரோலை செக் செய்வது நல்லது.
அறிகுறி 6: வயிறு அபரிவிதமாக வீங்கி இருப்பது. எடை கூடாமல்இ திடீரென வண்டி வீங்கி காணப்படும். பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு வந்தாலும். மீண்டும் சில தினங்களில் வண்டி வீங்கி பெரிதாவிவிடும். இது வயிற்றுப் புண் (அல்சர்) அல்லது நாள் பட்ட அல்சர் குடல் புற்று நோய்க்கான அறிகுறி.
அறிகுறி 7: கைகளில் ஏற்படும் விறைப்பு, அல்லது கைகளில் திடீரென ஏற்படும் வலி(ஊசி குத்துவது போல ஒரு நோ) இது உடலில் சக்கரையின் அளவு அதிகரித்துள்ளது என்பதனை காட்டும். திடீரென கண் மங்கலாக தெரிவது.
அடிக்கடி சிறு நீர் கழிப்பது(சிறு நீர் கொஞ்சமாக செல்லும்) ஆனால் பல முறை செல்லவேண்டி இருக்கும். சக்கரை நோய் என்பது உலகின் நம்பர் 1 உயிர் கொல்லி நோய். சரியாக கவனிக்காவிட்டால், கால் அழுகும், சிறு நீரகங்கள் செயல் இழக்கும். ரத்த நரம்புகளை பாதித்து பிளட் பிரஷரை கூட்டும். கண்களை பாதிக்கும்.
சடுதியாக இதயத்தை நிறுத்தும். மேலும் சொல்லப் போனால் மூளையில் சக்கரையின் அளவு கூடினால் கோமா நிலைக்கு சென்றுவிடுவார்கள் ( முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவைப் போல)
அறிகுறி 8: அடிக்கடி உறக்கம் வருவது. இல்லையேல் நீண்ட நேரம் உறங்குவது. உறக்கத்தில் இருந்து எழும்ப முடியாமல் இருப்பது. கடும் தலைவலி. தலைச் சுற்று. இது சிலவேளைகளில் மூளை கட்டியின் அறிகுறியாக இருக்கலாம். வெறும் தலை வலி என்று நினைத்து விடவேண்டாம்.அறிகுறி 9: கைகளில் அல்லது உடலில் தோன்றும் சிறு சிறு கொப்பளங்கள். இவை வெகுப் பருபோல இல்லாமல் சற்று பெரிதாக காணப்படும். இது திடீரென தோன்றும். இவ்வாறு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.
அறிகுறி 10: அடிக்கடி காச்சல், ஜலதோஷம்(தடிமன்) வருவது. புண் ஏற்பட்டால் மாற பல நாட்கள் பிடிப்பது. தொற்று வியாதிகள் உடனே தொற்றிக் கொள்வது. இவை இருந்தால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைந்துவிட்டது என்று அர்த்தம். எயிட்ஸ் நோய் தாக்கம் இருந்தாலும் இவ்வாறு தோன்றும். உடலுறவில் தொற்றும் இந்த எயிட்ஸ் பற்றி சில தவறாக கருத்துக்கள் உள்ளது.ஓரின உறவுக்காரர்களுக்கே இது அதிகமாக உள்ளதாக பரப்புரை செய்கிறார்கள். ஆனால் அப்படி அல்ல. எவர் ஒருவருக்கு எயிட்ஸ் இருக்கிறது. அவரோடு யார் உடலுறவு கொண்டாலும் , அவருக்கு அன் நோய் பரவும். ஆனால் அதனை கண்டு பிடிப்பது மகா கஷ்டமான விடையம். நல்ல ஆரோக்கியமான ஒரு இளைஞர் உடலில் எயிட்ஸ் வைரஸ் புகுந்தால் சிலவேளை 14 ஆண்டுகளுக்கு பிறகே அதன் தாக்கத்தை உணர முடியும். ஆனால் ரத்தப் பரிசோதனை செய்தால், உடனே கண்டு பிடித்துவிடலாம்.
ஆண்களை பொறுத்தவரை எயிட்ஸ் வைரசுகள், விந்து மற்றும் உறுப்பில் சுரக்கும் திரவத்தில் காணப்படுகிறது. எனவே இவை பெண்களுக்கு அல்லது வேறு ஒரு ஆணுக்கு செல்லும். அதே போல பெண்களுக்கு எயிட்ஸ் வைரஸ் பெண் உறுப்பில் சுரக்கும் திரவத்தில் காணப்படுகிறது. எனவே ஆண் உறுப்பின் முன் தோல்(மிக மிக மென்மையான) இடத்தில் அது பட்டால் ரத்த நாளம் ஊடாக உடலுக்குள் செல்கிறது.
இந்த வரைசஸ் தாக்கினால் 2 வாரத்தினுள் லேசாக ஒரு காச்சல் இருக்கும். அவ்வளவு தான். 2வாரம் கழித்தே எமது உடலில் உள்ள வெள்ளை அணுக்கள், இதனை எதிர்த்து போராடும் . இதனால் தான் காச்சலும் வரும். அதன் பின்னர் எயிட்ஸ் கிருமி, எமது உடலில் உள்ள வெள்ளை அணுக்களை எப்படி சமாளிப்பது என்று கண்டறிந்து அதுபோல செயல்பட அரம்பித்து விடும்.
பல வருடங்கள் பின்னரே இதனால் நாம் இறப்போம்.ஆனால் ஒரு நல்ல செய்தியும் உள்ளது. அமெரிக்கா முஸ்லீம்களை அழிக்க தயாரித்த இந்த வைரஸ், தற்போது தனது செயல் திறனை இழந்து வருகிறது. முதல் முதல் தயாரிக்கப்பட்ட இந்த வைரஸ் குட்டி போட்டு, குட்டி போட்டு தற்போது செயல் இழக்க ஆரம்பித்துள்ளது.
அதாவது, ஒரு பிரதியை நீங்கள் போட்டோ காப்பி எடுத்தால் அதனை மீண்டும் மீண்டும் எடுத்தால் ஒவர் பிரதியும் அதன் உண்மை தன்மையை இழந்து போகும். அது போல தற்போது உள்ள எயிட்ஸ் கிருமிகள் அதன் மொத்த திறனில் இருந்து சுமார் 50% குறைந்துள்ளதாம். இதனால் இதனை கட்டுப்படுத்துவது என்பதும் இனி கடினமான விடையம் இல்லை என்கிறார்கள் மருந்துக் கம்பெனிகள்.