புத்தூர் காட்டுப் பகுதியில் பல்கலை மாணவ மாணவிகள் அடிக்கும் கும்மாளம்!!

யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவர்களும் மாணவிகள் சிலரும் ஹயஸ் வாகனத்தில் புதூர் நாகதம்பிரான் ஆலயப்பகுதிக்கு அண்மையில் உள்ள காட்டுப் பகுதியில் பாலியல் லீலைகளில் ஈடுபட்டு அப்பகுதியைச் சேர்ந்தவர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பப்பட்டதாகத் தெரியவருகின்றது.இவர்கள் அப்பகுதியில் சிறிய குட்டை ஒன்றில் இறங்கி ஒருவருடன் ஒருவர் கட்டிப் புரண்டதாகவும், குக்குரல் இட்டு கத்தியதாகவும், தெரியவருகின்றது. இவர்களது குக்குரல் கேட்டு அப்பகுதிக்குச் சென்ற சிலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சில இளைஞர்கள் யுவதிகளை பிடித்து ஆடைகளை தூக்கிப் பார்த்து சேட்டைகள் செய்ததைக் கண்ட அவர்கள் குறித்த இளைஞர்களை எச்சரிக்கை செய்து தாக்க முற்பட்ட போது அவர்களுடன் வந்த யுவதிகள் தாக்க முற்பட்டவர்களை கேவலமாகத் திட்டியதாகவும் தெரியவருகின்றது.

தாங்கள் நண்பர்கள், எங்களைக் காப்பாற்றிக் கொள்ள எங்களுக்குத் தெரியும் என குறித்த யுவதிகள் தங்களை ஏசியதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர். 6 ஆண்களும் 7 பெண்களுமாக 13 பேர் குறித்த செயலில் ஈடுபட்டதாகத் தெரியவருகின்றது. அவர்கள் தொடர்பாக பொலிசாரிடம் முறையிடப் போவதாக அவர்களுக்குத் தெரிவித்த போது, தாங்கள் பல்கலைக்கழக மாணவர்கள், தங்களைப் பொலிசார் ஏதும் செய்யமாட்டார்கள் என, அவர்கள் பல்கலைக்கழக அடையாள அட்டையைக் காட்டிவிட்டுச் சென்றாகவும் அப்பகுதி வாசிகள் தெரிவித்துள்ளனர்.