மனித மூளை, சுமாராக நூறு பில்லியன் நரம்பு செல்களை கொண்டது. நமக்கு 3 வயது ஆகும்போதுதான் அந்த செல்கள் முழு வளர்ச்சி அடையும் என்பதால் அந்த வயதுக்கு முந்தைய நிகழ்வுகளை நம்மால் ஞாபகப்படுத்த முடியவில்லை. சராசரியாக 3 வயதை அடைந்துள்ள ஒரு குழந்தைக்கு புரியும் விதத்தில் சொல்லிக்கொடுத்தால் நாற்பது மொழிகளை கற்றுக்கொள்ளுமாம்.
அந்த அளவிற்கு மூளை செல்கள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கும். அதே குழந்தை வளர்ந்து, இருபது வயதை கடக்கும்போது நரம்பு செல்கள் குறையத் தொடங்கும். என்பது வயதை எட்டும்போது சுமார் 20% மூளை செல்களை இழந்திருக்கும். இதற்கு காரணம் மூளையின் ஆரோக்கியத்தை சரியாக பராமரிக்காமல் இருப்பதே காரணம். பொதுவாக மனிதர்கள் செய்யக்கூடிய 5 தவறுகளால் மட்டுமே மூளை தனது ஆரோக்கியத்தை இழக்கிறது. அந்த 5 தவறுகள்:
மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளான தானியங்கள், மீன் உணவுகள், பால், மாதுளை ஆகியவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதில்லை.
நியூரோடாக்ஸின்ஸ் அடங்கிய துரித உணவுகளை, அதாவது ஜங் ஃபுட்ஸ் வகைகளை விரும்பி உண்ணுவதால் மூளை சோர்வடைகிறது. செல் இழப்புகள் உண்டாகிறது.
சுயநினைவை மறக்கடிக்கும் மதுபானங்களை உட்கொள்வதினால் மூளை தனது செயல்பாட்டில் சரிவை சந்திக்கிறது. நினைவுகள் குழம்புகின்றன. நிகழ்வுகள் அடிக்கடி மறந்து போகின்றன.
சிகரெட் புகை நுரையீரலுக்கு மட்டும் பகை அல்ல. மூளைக்கும் பகை. மனித உடலில் வெள்ளை ரத்த அணுக்களை அழித்து, நரம்பு மண்டலத்தின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, மூளையை செயலிழக்க வைக்கிறது.
சூரிய ஒளியில் படாமல் நிழலுக்குள் மட்டுமே சுற்றும் மனிதர்களின் மூளை தனது பாதி வாழ்நாளை இழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.