ரயில் பேருந்தைவிட கட்டணம் குறைவா?

tarin_rain_08015போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து தமிழக அரசு, பேருந்துக் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வு பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளோ ‘விமானக் கட்டணமே பரவாயில்லை. ஏன் இப்படி இரண்டு மடங்காகக் கட்டணத்தை உயர்த்தி மக்களை வதைக்கிறது இந்த அரசாங்கம்?’ எனக் கொதிக்கத் தொடங்கியுள்ளனர்.

bus_spare_12285_17001சென்னையிலிருந்து திருச்சிக்கு 175 ரூபாயாக இருந்த சாதாரணக் கட்டணம் 265 ரூபாயாக உயர்ந்துள்ளது. நெல்லைக்கு 325 ரூபாயாக இருந்த கட்டணம் 460 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து கோவைக்குச் செல்லும் சாதாரணப் பேருந்துகளில் கட்டணம் 380 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அதேபோன்று சொகுசுப் பேருந்துகளின் கட்டணமும் உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து திருச்சிக்கு 250 ரூபாயிலிருந்து 300 ரூபாயாகவும், மதுரைக்கான கட்டணம் 330 ரூபாயிலிருந்து 400 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. நெல்லைக்கான கட்டணம் 540 ரூபாயாகவும், கோவைக்கான கட்டணம் 430 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகரப் பேருந்துகளில், குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 14 ரூபாயிலிருந்து 23 ரூபாய் வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதனப் பேருந்துகளுக்கான கட்டணம் 30 கி.மீ-க்கு 27 ரூபாயில் இருந்து 42 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இப்படிப் பேருந்துக் கட்டணம் விண்ணை எட்டும் நிலையில், மக்கள் ரயில் பயணம் மேற்கொள்ள ஆர்வமாகி வருகின்றனர். இதுகுறித்துப்பேசிய ரயில்வே மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் ஆசிர்வாதம் ஆச்சாரி, ”பேருந்துக் கட்டணத்தைவிட ரயில் கட்டணம் குறைவாக இருப்பதால் பொதுமக்கள் ரயில் பயணப் பதிவுகளை அதிகமாக செய்து வருகிறார்கள். உயர்த்தப்பட்டுள்ள பேருந்துக் கட்டணத்தோடு ஒப்பிடுகையில் ரயில் கட்டணம் 20 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடு வரையிலும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக மக்கள் ரயில் பயணத்தை நாடத் தொடங்கியுள்ளனர். அனைத்து ரயில்களிலும் கூடுதலாக புக்கிங் ஆகி வருகிறது. எனவே, வெயிட்டிங் லிஸ்ட்டும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கூடுதல் பெட்டிகளை இணைக்க முடிவு செய்துள்ளோம்.

ரயில் கட்டணம்

எந்தெந்த ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க முடியும் என்பதுகுறித்து ஆய்வுசெய்ய அதிகாரிகள் களம் இறங்கியுள்ளனர். மேலும், எந்தெந்த ரயில்களில் எவ்வளவு பெட்டிகளை இணைக்க முடியும் என்பது குறித்தும் அதன் இழுவைத்திறன் குறித்தும் ஆய்வுசெய்து வருகின்றனர். உயர்த்தப்பட்டுள்ள பேருந்துக் கட்டணத்தால், திருச்சிக்கு குளிர்சாதனப் பேருந்தில் 466 ரூபாய் கட்டணமாகிறது. ஆனால், ரயிலில் சீட்டர்  கிளாஸ் ( Seater Class) 145 ரூபாயும், முதல் வகுப்பில் 520 ரூபாயும் ஆகின்றன. படுக்கை வசதிகொண்ட பெட்டிகளில் 245 ரூபாயும், மூன்றாவது வகுப்பு குளிர்சாதனப் பெட்டிக்கு 630 ரூபாயும், இரண்டாவது குளிர்சாதனப் பெட்டிகளுக்கு 880 ரூபாயும், முதல் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகளுக்கு 1470 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அதேபோன்று குளிர்சாதனப் பேருந்துகளில், கோவைக்குப் பயணம் செய்ய 760 ரூபாய் ஆகிறது. ஆனால், ரயிலில் பயணம் செய்ய சீட்டர் கிளாசில் 180 ரூபாயும், முதல் வகுப்பில் 665 ரூபாயும் ஆகின்றன. படுக்கை வசதிகொண்ட பெட்டிகளுக்கு 315 ரூபாயும், மூன்றாவது வகுப்பு குளிர்சாதனப் பெட்டிக்கு 815 ரூபாயும், இரண்டாம் வகுப்பு குளிர் சாதனப் பெட்டிகளுக்கு 1,150 ரூபாயும் ஆகின்றன. முதல் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகளுக்கு 1,940 ரூபாய் ஆகிறது.

அரசு குளிர் சாதனப் பேருந்துகளில் சேலத்துக்குச் செல்ல 512 ரூபாய் கட்டணம். ஆனால், அதே சேலத்துக்கு ரயிலில் பயணம் செய்ய சீட்டர்  கிளாசில் (Seater Class) 145 ரூபாயும், முதல் வகுப்பில் 520 ரூபாயும் ஆகின்றன. படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு 245 ஆசிர்வாதம் ஆச்சாரிரூபாயும், மூன்றாவது வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகளில் 630 ரூபாயும், இரண்டாவது வகுப்பு குளிர் சாதனப் பெட்டிகளுக்கு 880 ரூபாயும், முதல் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகளுக்கு 1,470 ரூபாயும் ஆகின்றன.

மதுரை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களுக்குச் செல்லவும் அரசுப் பேருந்துகளில் கட்டணம் அதிகமாகவுள்ளது. மதுரைக்கு குளிர் சாதனப் பேருந்தில் 515 ரூபாய் ஆகிறது. இதே பயணத்துக்கு ரயிலில், சீட்டர் கிளாஸ் 180 ரூபாயும், முதல் வகுப்பில் 665 ரூபாயும் ஆகின்றன. படுக்கை வசதிகொண்ட பெட்டிகளுக்கு 315 ரூபாயும், மூன்றாவது வகுப்பு குளிர்சாதனப் பெட்டிக்கு 815 ரூபாயும், இரண்டாவது வகுப்பு குளிர் சாதனப் பெட்டிகளுக்கு 1,150 ரூபாயும் ஆகின்றன. முதல் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகளுக்கு 1,940 ரூபாயும் ஆகிறது.

திருநெல்வேலிக்குச் செல்ல அரசு குளிர் சாதனப் பேருந்துகளில் 925 ரூபாய் கட்டணமாகிறது. ரயில்களில் சீட்டர் கிளாசில் 200 ரூபாயும் (Seater Class) , படுக்கைவசதி கொண்ட பெட்டிகளுக்கு 385 ரூபாயும், மூன்றாவது வகுப்பு குளிர்சாதனப் பெட்டிக்கு 1,010 ரூபாயும், இரண்டாம் வகுப்பு குளிர் சாதனப் பெட்டிகளுக்கு 1,430 ரூபாயும் ஆகின்றன. முதல் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகளுக்கு 2,335 ரூபாய் கட்டணமாக உள்ளது. இப்படிப் பேருந்து பயணத்தைவிடவும் ரயில் பயணத்தில் கட்டணம் குறைவாக உள்ளதால், மக்கள் தற்போது ரயில் சேவையை நாடத் தொடங்கியுள்ளனர். அதற்கேற்றவாறு ரயில்வே அமைச்சகமும் பயணிகளின் தேவையை கருத்தில்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது” என்றார்.