பல கோடி ரூபாய் மோசடி; நடிகை சுருதி மீது மேலும் வழக்கு!

கோவை: திருமணம் செய்து கொள்வதாக கூறி, மோசடியில் ஈடுபட்ட நடிகை மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் தனலட்சுமி நகரைச் சேர்ந்த நடிகை சுருதி(21). இவர் ’ஆடி போனா ஆவணி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

unnamedஇப்படம் வெளியாகாத நிலையில், தனது உண்மை முகத்தை வெளிக்காட்டியுள்ளார். ஏராளமான பணக்கார வாலிபர்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

அதைக் கொண்டு பல கோடி ரூபாய் பணத்தை பறித்துள்ளார். இதற்கு சுருதியின் தாய் சித்ரா, தம்பி சுபாஷ், உறவினர் பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

 இவர்கள் மீது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016ல் சந்தோஷ் குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் கைது சுருதி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது பாலமுருகன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

கோவையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு மாவட்ட போலீசாரும் சுருதியிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.