தமிழகத்தில் காதலியை பழிவாங்க காதலன் தமது நண்பருடன் சேர்த்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார், ஆட்டோ ஓட்டுனரான இவர் திருவள்ளூரை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ளார்.
ஆனால் அந்த பெண்ணோ இவரை திருமணம் செய்து கொள்ளாமல் வேறோருவரை திருமணம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் அந்த பெண்ணை பழிவாங்க திட்டம் தீட்டினார்.
இதையடுத்து அவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை காண்பித்து மிரட்டி கடந்த செவ்வாய் அன்று காரில் வரவழைத்துள்ளான்.
அப்பெண்ணிடம் அவர் தனது நண்பன் அன்பரசு உடன் சேர்ந்து காரின் உள்ளேயே வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அப்போது திருமுடிவாக்கத்தில் இரவு சாலையோரம் நின்று கொண்டிருந்த காரை ரோந்து பொலிசார் சோதனையிட்டதில் இந்த சம்பவம் தெரியவந்தது. அதன் பின் பொலிசார் இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்