எதிர்வரும் ஜனவரி 31ல் 150 ஆண்டுகளுக்குப் பின்னர் நிகழும் அரிதான முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இது நீல நிலா என்று அழைக்கப்படுகிறது.
ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் தோன்றும் போது நிலவின் வடிவத்தில் நிறத்தில் மாற்றங்கள் ஏற்படுகிறது. எரிமலையின் சாம்பல் துகள்கள், புகை காரணமாக நிலவில் மாறுபாடுகள் ஏற்படுகிறது.2018ஆம் ஆண்டில் அடுத்தடுத்து ஒன்றிற்கு மேற்பட்ட முறைகள் அதிசய நிலவு வானில் தோன்றவிருப்பதாக நாசா தெரிவித்திருந்தது.
இதனடிப்படையில் இந்த வருட புத்தாண்டு தினத்தன்று அந்த முதல் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து ஜனவரி 31ல் சூப்பர் நிலவு தோன்றும் என நாசா ஏற்கனவே அறிவித்திருக்கிறது.இது ஒரு ஒரு புறமிருக்க கிரக பலன் ரீதியாகவும் பல மாற்றங்கள் நடைபெற இருக்கின்றன.ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 18 ஆம் நாள் 31.1.2018 புதன் கிழமை பெளர்ணமி தினத்தன்று பூசம் நட்சத்திரத்தில், ஆயில்யம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் கடகம் இராசியில் கன்னியா லக்கினத்தில் சந்திர கிரகணம் ஆரம்பம் ஆகி முடிவடைகிறது.
சந்திர கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்கள் புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் அனுசம் கேட்டை உத்திரட்டாதி ரேவதி.வருகிற ஜனவரி 31ஆம் தேதி சந்திர கிரகணம் மாலை 5.16 க்கு ஆரம்பமாகி இரவு 8.40 க்கு முடிவடைகிறது.பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரகாரர்கள்’புதன்கிழமை பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும்.அதே போல புனர்பூசம் பூசம் ஆயில்யம் விசாகம் கேட்டை பூரட்டாதி அனுஷம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும்.