தமிழகத்தில் இன்று கிடைத்த செய்திகள் எல்லாமே அதிர்ச்சி ரகங்கள். தற்கொலை, கொலை, மனிதநேயமற்ற செயல்கள் , பள்ளி மாணவர்களின் தவறான பழக்க வழக்கங்கள் தமிழக மக்களை அடுத்தடுத்து அதிரவைத்துள்ளன.
கொலை செய்யப்பட்ட அய்யனார்விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுதூர் அருகே போலீஸ்காரர், இளைஞர் ஒருவரை வெட்டிக் கொலை செய்துள்ளார். காரணம் கேட்டால் அதிர்ந்து போவீர்கள். கிறிஸ்டியான் பேட்டையைச் சேர்ந்த அய்யனார், அங்குள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
இதே ஊரைச் சேர்ந்த குமார் சென்னை எண்ணூரில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். குமாரிடம் அய்யனார் பெண் குரலில் பேசி, காதல் மொழிகள் கூறியிருக்கிறார். விளையாட்டாக அய்யனார் இதை செய்ய, குமார் தன்னிடம் பேசுவது பெண் என்றே கருதியுள்ளார்.
போனில் பேசிய காதலியை தேடி சொந்த ஊருக்குச் சென்ற குமாருக்கு, தன்னிடம் பெண் போல பேசியது அய்யனார் என்று தெரியவந்ததது.
இதனால், கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனார். மனமுடைந்த குமார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். விருதுநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமார், உறவினர்களிடம் விஷயத்தைச் சொல்ல, அய்யனாரை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, அய்யனாரை அங்குள்ள குளத்தின் அருகே குமாரும் அவரின் உறவினர்களும் வெட்டிக் கொலை செய்தனர்.
கொலையில் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட, போலீஸ்காரர் குமார் தலைமறைவாகி விட்டார். விளையாட்டாக செய்த விஷயம் கொலையில் போய் முடிந்தது விருதுநகர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.