1 ½ மாத குழந்தை கொடூரமாக கொலை – இருவர் கைது

1 ½ மாத குழந்தையொன்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவோயா பகுதியில் பதிவாகியுள்ளது.

murder_1514782507குறித்த குழந்தையின் இளம் வயது தாய் நேற்று (24) இரவு சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் தகவல் வழங்கியுள்ளார்.

லக்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவோயா பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தந்தையினால் இந்த கொடூர கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் குழந்தையை கொலை செய்து அவரது தாயையும் காட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு குழி தோண்டி புதைத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய் தம்புள்ளை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் சம்பத் விக்கிரமரத்னவை சந்தித்து குறித்த விடயத்தை தெரிவித்ததையடுத்து, அவர் குறித்த இளம் தாயை லக்கல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

இந்தப் பெண் இதற்கு சில வருடங்களுக்கு முன்னர் குறித்த நபரை காதலித்து திருமணம் செய்யாமலேயே வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். திருமண வயதை அடையாத காரணத்தினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குறித்த பெண் நன்னடத்தை பிரிவில் ஒப்படைக்கப்படட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் பிணையில் விடுதலையாகி , மறுபடியும் குறித்த இளம் பெண்ணை அழைத்து வந்து லக்கல மாவோயா பிரதேசத்தில் வீடொன்றில் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையிலேயே குறித்த இளம் பெண் கர்ப்பமாகி பெண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளார். குறித்த குழந்தைக்கு ஒன்றை மாதம் கழிந்த பின்னர், அண்மையில் கணவன் மனைவிக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன்போது தனது மடியில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை மூச்சு திணறச் செய்து கணவர் கொலை செய்து, அவரது தாயுடன் காட்டுக்கு சென்று புதைத்ததாக அப்பெண் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவித்தால் உன்னையும் கொலை செய்துவிடுவோம் என, அவர்கள் இருவரும் தன்னை அச்சுறுத்தி, வேறொரு இடத்துக்கு பலாத்காரமாக அழைத்துச் சென்று தங்கவைத்திருந்தனர் எனவும், அப் பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மறைத்து வைத்திருந்த இடத்தில் இருந்து நேற்று முன்தினம்(24) குறித்தப் பெண் தப்பி வந்து பொலிஸ் நிலையத்தில் மேற்குறிப்பிட்டவாறு நடந்த விபரங்களை தெரியப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய குறித்த இடத்துக்கு விரைந்துச் சென்ற பொலிஸார், பெண்ணின் கணவனையும், தாயையும் கைது செய்துள்ளனர்.

இதுவரை கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, குழந்தையின் சடலத்தை புதைத்த இடத்திலிருந்து மீட்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என அறியமுடிகிறது.