அர­சாங்கம் நீடிக்­குமா? இல்­லையா?

தேசிய அர­சாங்­கத்தை நிறுவும் நோக்­குடன் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் இடையில் கைச்­சாத்­தி­டப்­பட்ட புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் நீடிக்­கப்­ப­டுமா? இல்­லையா?

image_1486527164-22dcc01f9a

என்­பது தொடர்பில் கூட்டு எதிர்க்­கட்­சியும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் ஆளும் கட்­சி­யிடம் கேள்வி எழுப்­பி­ய­மை­யினால்

நேற்று சபையில் ஆளும், எதிர்க்­கட்­சி­யி­ன­ருக்கு இடையில் கடு­மை­யான வாக்­கு­வாதம் ஏற்­பட்­டது.

ஷிரானி விஜே­விக்­கிர, பிய­சேன கமகே ஆகி­யோ­ருக்கு இரா­ஜாங்க அமைச்சு பத­விகள் வழங்­கப்­பட்­டமை தேசிய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை எண்­ணிக்­கையின் நிர்­ண­யித்­திற்கும் அர­சி­ய­ல­மைப்­பிற்கும் முர­ணா­னது என்று கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் வாதிட்­டனர்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை நிலை­யியற் கட்­டளை 23 இன் 2 கீழ் கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற குழு தலைவர் தினேஷ் குண­வர்­தன எம்.பி கேள்வி எழுப்­பி­யதை அடுத்தே சபையில் சர்ச்­சை­யான நிலைமை ஏற்­பட்­டது.

இதன்­போது தினேஷ் குண­வர்­தன எம்.பி கேள்வி எழுப்பும் போது,

நாட்டின் அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான முக்­கி­ய­மான விட­ய­மொன்றை சபைக்கு முன்­வைக்க விரும்­பு­கின்றேன். 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி பாரா­ளு­மன்ற தேர்­தலின் பின்னர் இரு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்­க­மொன்றை நிறுவ போவ­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க யோச­னை­யொன்றை முன்­வைத்தார்.

இதன்­போது அமைச்­ச­ர­வையின் அமைச்­சர்கள், இரா­ஜாங்க மற்றும் பிரதி அமைச்­சர்கள் எண்­ணிக்­கையும் நிர்­ணயம் செய்­யப்­பட்­டுள்­ளது.

இதன்­படி அர­சி­ய­ல­மைப்பின் 46 ஆவது ஷரத்தின் பிர­காரம் தேசிய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை எண்­ணிக்கை நிர்­ணயம் செய்­யப்­பட்­டுள்­ளது. இதற்­கி­ணங்க தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்க முடி­யு­மான அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்கள், இரா­ஜாங்க மற்றும் பிரதி அமைச்­சர்­களின் எண்­ணிக்கை நிர்­ணயம் செய்­யப்­பட்­டுள்­ளது என்­ப­தனை அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்­ளுமா? தற்­போது இந்த விதி­முறை மீறப்­பட்­டுள்­ளது என்­ப­தனை ஏற்­பீர்­களா? ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் சுதந்­திரக் கட்­சிக்கும் இடை­யி­லான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி நிறைவு பெற்­றுள்­ளமை அர­சாங்கம் ஏற்­குமா?

அத்­துடன் ஷிரானி விஜே­விக்­கி­ரம மற்றும் பிய­சேன கமகே ஆகி­யோ­ருக்கு இரா­ஜாங்க அமைச்சு பத­விகள் வழங்­கப்­பட்­டுள்­ள­மை­யினால் அர­சி­ய­ல­மைப்பின் 46 ஆவது ஷரத்து மீறப்­பட்­டுள்­ளது. இதனை ஏற்­பீர்­களா என்று கேள்வி எழுப்­பினார்.

இத­னை­ய­டுத்து எழுந்து பேசிய சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான ல­க்ஷமன் கிரி­யெல்ல,

ஷிரானி விஜே­விக்­கி­ரம இரா­ஜாங்க அமைச்­சினை பெற்­றுக்­கொண்­ட­மையா உங்­க­ளது பிரச்­சினை. ஷிரானி விஜே­விக்­கி­ரம மீண்டும் உங்­க­ளுக்கு தேவையா? என கிண்­ட­லாக பதி­ல­ளித்தார்.

இதன்­போது தினேஷ் குண­வர்­தன எம்.பி கூறு­கையில்,

ஷிரானி எனக்கு தேவை­யில்லை. ஐக்­கிய தேசி­யக்­கட்சி ஷிரா­னியை வைத்­துக்­கொள்­ளட்டும். தற்­போது தேசிய அர­சாங்­கத்தின் இரு பிர­தான கட்­சி­களின் ஒப்­பந்தம் நிறை­வு­பெற்­றுள்­ளது. அர­சி­ய­ல­மைப்­பிற்கு முர­ணாக அமைச்­ச­ரவை இயங்கி வரு­கின்­றது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்த விட­யத்தில் பதில் வழங்க வேண்டும் என்றார்.

இத­னை­ய­டுத்து பேசிய அமைச்சர் ல­க்ஷமன் கிரி­யெல்ல,

இது தொடர்­பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க விரைவில் பதில் வழங்­குவார். எனினும் தேசிய அர­சாங்­கத்தின் நில­வரம் தொடர்­பாக எதி­ரணி கவலை கொள்ள தேவை­யில்லை. இது ஆளும் கட்சி பிரச்­சினை. இதில் எதி­ரணி தலை­யிட வேண்­டி­ய­தில்லை. தேசிய அர­சாங்­கமா உங்­க­ளுக்­குள்ள பிரச்­சினை? என்றார்.

இதன்­போது மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும் எதிர்க்­கட்­சியின் பிர­தம கொற­டா­வு­மான அநுர குமார திஸா­நா­யக்க கூறு­கையில்,

தேசிய அர­சாங்கம் நிறு­வு­வ­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க யோசனை முன்­வைத்­த­மையின் பிர­காரம் தேசிய அர­சாங்­கத்தில் அமைச்­சர்கள் 48 உம், இரா­ஜாங்க மற்றும் பிரதி அமைச்­சர்கள் 45 ஆக இருக்க வேண்டும் என்­பதே நிர்­ண­யிக்­கப்­பட்ட தீர்­மா­ன­மாகும்.

அத்­துடன் தேசிய அர­சாங்கம் இரண்டு வரு­டத்தில் நிறைவு பெறும் என்றே ஆரம்­பித்தல் கூறினர். எனினும் பிர­தான கட்­சி­க­ளுக்கு இடையில் கைச்­சாத்­தி­டப்­பட்ட ஒப்­பந்தம் செப்­டம்பர் மாதமே நிறைவு பெற்று விட்­டது. இந்­நி­லையில் புதிய ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளதா? என்று கூறிய போது இடையில் குறுக்­கிட்டு பேசிய அமைச்சர் ல­க்ஷமன் கிரி­யெல்ல,இது தேசிய அர­சாங்­கத்தின் பிரச்­சி­னை­யாகும். எதி­ரணி தலை­யிட வேண்­டி­ய­தில்லை என்றார்.

இதன்­போது அநுர குமார திஸா­நா­யக்க எம்.பி கூறும் போது,

இது தேசிய அர­சாங்­கத்தின் பிரச்­சினை மாத்­தி­ர­மல்ல. இது நாட்டு மக்­களின் பிரச்­சி­னை­யாகும். இரண்டு வரு­டங்கள் என்று கூறி­விட்டு தற்­போது அதனை தாண்டி தேசிய அர­சாங்கம் பய­ணித்த வண்­ண­முள்­ளது. இரு பிர­தான கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான ஒப்­பந்தம் நீடிக்­கப்­ப­டுமா? இல்­லையா? புதிய ஒப்­பந்­தங்கள் ஏதும் கைச்­சாத்­திட்­டி­ருந்தால் சபா­நா­ய­க­ருக்கு அறி­விக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும்.

அப்­ப­டி­யாயின் சபா­நா­ய­கரே உங்­க­ளுக்கு புதிய ஒப்­பந்­தங்கள் ஏதும் கிடைத்­துள்­ளதா? என்றார். இதன்­போது தனக்கு புதிய ஒப்பந்த தொடர்பான எந்தவொரு நகலும் அதற்கான தகவல்களும் கிடைக்கவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய கூறினார்.

இதன்போது உதய கம்மன்பில எம்.பி கூறுகையில்,

தேசிய அரசாங்கத்தின் ஒப்பந்தம் நிறைவு பெற்றுள்ள நிலையில் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் சொகுசு வாழ்க்கைக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியுமா? என்றார்.

இதனையடுத்து சபாநாயகர் கரு ஜயசூரிய குறுக்கிட்டு இந்த கேள்விக்கான பதிலை பிரதமர் வழங்குவார் என்று கூறி வாக்குவாதத்தை நிறைவுக்கு கொண்டு வந்தார்.