நீர்வேலிப் பகுதியில் தோட்டத்தில் நின்ற கணவனுக்கு சைக்கிளில் மதிய உணவு கொண்டு சென்ற பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்து வழி மறித்த இளைஞன் ஒருவன் அப் பெண்ணுடன் சில நிமிடங்கள் கதைத்துவிட்டு அப் பெணணை அருகில் உள்ள தோட்டக் காணிக்கு கொண்டு சென்று அப் பெண்ணின் பாவாடையை தூக்கி சில்மிசம் செய்து கொண்டிருந்ததை தூத்தில் நின்று அவதானித்த அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அது தொடர்பாக பெண்ணின் கணவனுக்கு தெரிவித்துள்ளார்.
பெண்ணின் கணவர் தோட்டத்தில் இருந்து வருவதை அவதானித்த குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியுள்ளார். இதன் பின்னர் குறித்த பெண் கணவரால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கணவனிடம் இருந்து பெண்ணைக் காப்பாற்றி அப்புறப்படுத்தியுள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்துக்கு நோட்டிஸ் கொண்டு வந்தவர் தனது கட்சி சார்பாக பிரச்சாரம் செய்ததாகவும் அதனாலேயே அருகில் உள்ள தோட்டக் காணிக்கு செல்ல வேண்டி ஏற்பட்டதாகவும் பெண்ணால் கணவனுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தனது கால் பகுதியில் ஏறி சிலந்தி ஒன்று உள்ளே புகுந்ததால்தான் அதனை அகற்ற இளைஞன் முயற்சித்ததாகவும் பெண் கணவருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதே வேளை குறித்த இளைஞர் கட்சி ஒன்றின் செயற்பாட்டாளர் எனவும் கணவர் இளைஞனை அடையாளம் கண்டுள்ளதாகவும் இதன் பின்னர் இளைஞனின் வீட்டுக்கு கணவரும் இன்னொருவரும் சென்று இளைஞனைத் தேடியதாகவும் தெரியவருகின்றது.
நேற்று முன்தினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் தற்போது குறித்த இளைஞன் தலைமறைவாக உள்ளார் எனவும் பெண்ணின் கணவரும் இன்னும் சிலரும் இளைஞனின் வீட்டுக்கு இளைஞனைத் தேடி பல தடவைகள் வந்து போனதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்