மைத்திரியின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை!

கடந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடிகள் மற்றும் அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

imagesஇந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பசில் ராஜபக்ச, விமல் வீரவங்ச உள்ளிட்ட கடந்த அரசாங்கத்தில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ஊழல் மோசடிகள் மற்றும் அரச வளங்களை துஷ்பிரயோகம் குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

இதன்படி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட பல அறிக்கைகளின் சூத்திர தாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சட்டமா அதிபர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி, அது குறித்த விசாரணை அறிக்கை, விசாரணை அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு என கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஊழல் மோசடிகளுக்கு எதிராக ஜனாதிபதியின் கடுமையான அறிவிப்புகள் கொழும்பு அரசியலை ஆட்டம் காண செய்துள்ள நிலையில், ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.