புலிகளின் சொத்துக்களை விற்பனை செய்ய அரசாங்கம் திட்டம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Fotor0203111529-1தமிழீழ விடுதலைப் புலிகளின் சுமார் 1.5 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையில் காணப்படும் காணியொன்றே இந்த சொத்துக்களில் மிகவும் பெறுமதி வாய்ந்தது என தெரிவிக்கப்படுகிறது.

வன்னிப் போருக்கு முன்னதாக இந்த காணி தொடர்பில் எவ்வித தகவல்களும் தெரியவரவில்லை.

வெள்ளவத்தையில் அடுக்கு மாடி வீடொன்றும், அச்சகமொன்றும் இவ்வாறு விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டிருந்த பணமும் அரசுடமையாக்கப்படவுள்ளது.