கொட்டும் மழையில் இளவரசி மருத்துவமனைக்கு!

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் கொட்டும் மழையில் குடை பிடித்து மருத்துவமனை வந்து சென்றது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இளவரசர் வில்லியம்ஸ் மனைவி கேட் மிடில்டன், இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ள நிலையில் மூன்றாம் முறையாக கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில் தனது உடல்நிலை குறித்து பரிசோதனை செய்ய கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையின் NHS பிரிவிற்கு இன்று வந்துள்ளார்.

Capturecjg

வழக்கமான மனநல நிலைமைகள் குறித்த பரிசோதனைக்காக இளவரசி மருத்துவமனை வந்ததாக கூறப்படுகிறது.

625.0.560.320.160.700.053.800.668.160.90 (1)

மேலும் இளவரசியின் முதல் இரண்டு குழந்தைகள் புனித.மேரி மருத்துவமனையில் பிறந்துள்ள நிலையில் தனது மூன்றாவது குழந்தையை அரண்மனையில் பெற்றெடுக்க இளவரசி கருதுவதாகவும் கூறப்படுகிறது.

அழகிய நீல கோட் அணிந்து வந்த இளவரசி, மழை பெய்ததால் தானே குடை பிடித்து நடந்து வந்தது பார்வையாளர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

625.0.560.320.160.700.053.800.668.160.90 (2)