குளிர்காலம்/பனிக்காலம் என்றதுமே சளி, இருமல் பாடாய்படுத்தும், இதற்காக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை விட பழங்கால பாட்டி வைத்தியமே சிறந்தது.
கை வைத்தியங்கள் குறிப்பிட்ட நோயை குணப்படுத்துவது மட்டுமின்றி உடலுக்கு நன்மை பயக்கும்.
- ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் வெந்தய விதைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால் தொண்டைப் புண் வரவிடாமல் தடுக்கும்.
- வறட்டு இருமல் இருப்பவர்கள் சுக்கு, மிளகு சேர்த்த வெந்நீர் குடித்தால் நல்லது.
- துளசி மிகச்சிறந்த மூலிகையாகும், துளசி சாற்றுடன், சரிசம அளவில் வெங்காயச் சாறு சேர்த்து பருகி வந்தால் இதமாக இருக்கும்.
- இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மிளகுத் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இவற்றுடன் சீரகம் கலந்து உண்டால் சளி எட்டி கூட பார்க்காது.
- நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு மற்றும் வெங்காய சாறு ஆகியவற்றை சரிசம அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.
- உடல் பொலிவிற்கு வலிமை சேர்க்கும் கேரட் சாறு சளியை எதிர்க்கவும் நல்லது, இந்த ஜூஸை சளி பிடித்திருக்கும் போது குடித்தால், விரைவில் நிவாரணம் கிடைக்கும்.