காணொளியை வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட மணமகள்!

இந்தியாவில் முன்னாள் காதலனின் தொடர் மிரட்டலால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பந்த்ரா மாவட்டத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. நிஷா தேவிதாஸ் என்ற பெண்ணுக்கு பிப்ரவரி 4-ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

திருமண வேலையில் அவர் குடும்பத்தார் முழு வீச்சில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தான் விஷம் குடிக்கும் வீடியோவை பதிவு செய்த நிஷா அதனை தனது முன்னாள் காதலனுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார்.

பின்னர் மயங்கி விழுந்த அவரை மீட்ட குடும்பத்தார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு நிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

முன்னாள் காதலரின் தொடர் மிரட்டல் காரணமாக நிஷா தற்கொலை முடிவுக்கு வந்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து நிஷாவின் சகோதரர் ரவி கவ்லி கூறுகையில், திருமணத்துக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் நிஷா உயிரை விட்டுள்ளார்.

அவரின் தற்கொலைக்கு நிகில் என்ற இளைஞர் தான் காரணம். என் சகோதரியை மயக்கி அவரிடம் நிகில் தவறாக நடந்துகொண்டுள்ளார்.

பின்னர் அதை வைத்து நிஷாவை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். நிகிலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

தற்கொலை வழக்காக இதை பதிவு செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
19-2

20-1