சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்ந்தவருக்கு 2 வருடம் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இழப்பீடாக 40 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும் என்றும் நேற்று உத்தரவிடப்பட்டது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு சிறுமியைக் கடத்திச் சென்று கனகராயன் குளம் பகுதியில் தடுத்து வைத்திருந்ததோடு 3 தடவைகள் வன்புணர்ந்தார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. அதற்கமைய அவருக்கு எதிராக 4 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்கு யாழ்ப்பாண மேல்நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது சந்தேகநபர் குற்றத்தை ஏற்றுக் கொண்டார். இருவரும் விரும்பியே அவ்வாறு சென்றனர் என்றும் கூறப்பட்டது. அதையடுத்து மேற்குறித்த தண்டனை விதிக்கப்பட்டது. ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 3 ஆயிரம் ரூபா வீதம் தண்டமும் விதிக்கப்பட்டது.