கொழும்பு வந்த வெளிநாட்டவரின் அதிரடி செயற்பாடு!

கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் சென்ற வெளிநாட்டு தம்பதியினரின் பணப்பை கொள்ளையிடப்பட்டுள்ளது.

625.147.560.350.160.300.053.800.264.160.90கடந்த 23ம் திகதி டென்மார்க்கை சேர்ந்த தம்பதி ஒன்றின் பணப்பபை கொள்ளையடிக்கப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜா-எல கப்புவத்தை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரினால் இந்த பை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் வெளிநாட்டவர் ஒருவர் கழுத்தில் போட்டிருந்த கைப்பையை நபர் ஒருவர் பறித்துள்ளதுடன், ரயிலில் இருந்து குதித்துள்ளார்.

இதன் போது வெளிநாட்டவரும் ரயிலில் இருந்து குதித்து திருடனை துரத்திச் சென்ற போதிலும் அவரால் பிடிக்க முடியாமல் போயுள்ளது.

கொள்ளையிடப்பட்ட கைப்பையில் வெளிநாட்டு தம்பதியினரின் வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு தேவையான தற்காலிக உதவிகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.