முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து உடனான ஆஷஸ் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, அதன்பின் நடந்த ஒருநாள் தொடரில் சொதப்பி தொடரை இழந்தது. இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுடனான முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது.
பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஆரோன் பின்ச் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்துக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.