ஹட்டன் – எபோட்சிலி பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்த சம்பவம் நேற்றைய தினம் மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தற்கொலை செய்து கொண்ட மாணவர் தரம் 9 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய பிரசாந்தகுமார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்த சம்பவத்தால் குறித்த சிறுவனின் பெற்றோர் மிகுந்த கவலையுடன் காணப்படுகின்றனர்.குறித்த மாணவர் அணிந்திருந்த காற்சட்டையின் பையில் சிலரது பெயர்களை குறிப்பிட்டு தனது மரணத்துக்கு இவர்கள்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துள்ளார்.மாணவரின் தற்கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை, மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.