பிரான்ஸில் நட்டெல்லாவின் அதிரடி விலை குறைப்பால் சூப்பர் மார்க்கெட்டுகள் கலவர பூமி போன்று காட்சியளிக்கிறது.
பிரான்ஸ் மக்கள் பெரிதும் விரும்பும் உணவான நட்டெல்லாவின் சந்தை விலையை அதிரடியாக 70 சதவிகிதம் குறைத்துள்ளது.
4.50 யூரோக்களுக்கு விற்கப்பட்ட ஒரு நட்டெல்லா தற்போது 70 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டு 1.40 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
நட்டெல்லாவின் இந்த அதிரடி அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பிரான்ஸ் மக்கள், நாடு முழுவதும் உள்ள சூப்பர்மார்க்கெட்டுகளில் குவிந்து நட்டெல்லாவை வாங்க முயன்று வருகின்றனர்.
இதனால் கலவர பூமி போன்று காட்சியளித்த சூப்பர் மார்க்கெட்டில் சிக்கிய வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், விலங்குகளை போல் மக்கள் செயல்படுகின்றனர். ஒரு பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து அவர் கையில் இருந்த நட்டெல்லாவை ஒரு பெண் பிடிங்கி செல்கிறார். என கூறினார்.
இந்நிலையில் விற்பனை தொடங்கிய பதினைந்தாவது நிமிடத்தில் அனைத்து நட்டெல்லா பாட்டிலும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் வாடிக்கையாளர்களின் இந்த செயலை கட்டுப்படுத்த முடியவில்லை என கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் உலகம் முழுவதும் உள்ள 160 நாடுகளில் ஆண்டு தோறும் 365 மில்லியன் கிலோ நட்டெல்லா விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.