பேரிச்சம்பழத்தை அதிகமாக உண்டால் இந்த நோய் தாக்குமாம்…..

பேரிச்சம் பழம் மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருளாக கருதப்படுகிறது. ஏனெனில் பேரிச்சம் பழத்தில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இந்த பேரிச்சம் பழம் வறண்ட பகுதிகளில் வளரக்கூடியது.என்ன தான் ஆரோக்கியமானதாக இருந்தாலும், பேரிச்சம் பழத்தை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அது உடலில் பல பிரச்சனைகளை உண்டாக்கும்.அதிலும், ஒருவர் பேரிச்சம் பழத்தை ஒரே வேளையில் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அதனால் டைப்-2 சர்க்கரை நோய் வரும் அபாயத்தை உண்டாக்கும்.இதுப்போன்று ஏராளமான எதிர்பாராத பக்கவிளைவுகளை பேரிச்சம் பழத்தை அதிகமாக சாப்பிட்டால் சந்திக்க நேரிடும்.

 உடல் பருமன்:

பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. பொதுவாக நார்ச்சத்துள்ள உணவுகள் உடல் எடையைக் குறைக்க உதவும் என்பது நம் அனைவருக்குமே தெரியும்.ஆனால், பேரிச்சம் பழம் மட்டும் ஏன் உடல் எடையைக் குறைக்க உதவுவதில்லை என்பதற்கு சரியான காரணம் ஒன்று உள்ளது.என்ன தான் பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து நிறைந்திருந்தாலும், கலோரிகள் அதிகம் இருந்தால், அது உடல் எடையைத் தான் அதிகரிக்கும்.1 கிராம் பேரிச்சம் பழத்தில் 2.8 கலோரிகள் உள்ளது. எனவே எடையைக் குறைக்க டயட்டில் இருப்போர், தங்களது டயட்டில் பேரிச்சம் பழத்தை அதிகம் சேர்த்துக் கொள்ளாதீர்கள். இல்லாவிட்டால் உடல் பருமன் தான் அதிகரிக்கும்.

 வயிற்று வலி:

பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்துள்ள உணவுகள் இதய பிரச்சனை மற்றும் டைப்-2 சர்க்கரை நோய் போன்றவற்றை தடுக்கும் திறன் கொண்டிருக்கும். நார்ச்சத்து என்பது தாவர வகை கார்போஹைட்ரேட்இ அவை உடலில் செரிமானமாகாது.மாறாக குடலியக்கத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும். ஆனால் அளவுக்கு அதிகமான நார்ச்சத்து, குடலில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து, வயிற்று வலியை உண்டாக்கும்.வாய்வுத் தொல்லை:

அதிகளவு ஃபுருக்டோஸ் நிறைந்த உணவுகள் வயிற்றில் வாய்வுத் தொல்லையை உண்டாக்கும். இத்தகைய ஃபுருக்டோஸ் பேரிச்சம்பழத்தில் அதிகம் உள்ளது.

எனவே பேரிச்சம் பழத்தை ஒருவர் ஒரே வேளையில் அதிகம் சாப்பிட்டால், அதனால் கடுமையான வாய்வுத் தொல்லையால் அவஸ்தைப்படக்கூடும்.

வயிற்றுப் போக்கு:பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் நிறைந்துள்ளது. இந்த பேரிச்சம் பழத்தை ஒருவர் ஒரே வேளையில் அதிகளவு சாப்பிட்டால், அதனால் கடுமையான வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்பட வேண்டிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. எனவே அளவாக சாப்பிட்டு நன்மையைப் பெறுங்கள்.

கர்ப்பிணிகள் சாப்பிடலாமா?இப்போது கர்ப்ப காலத்தில் பேரிச்சம் பழம் சாப்பிடலாமா என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்திருக்கும்.ஆய்வுகளில் கர்ப்ப காலத்தில் பெண்கள் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால், குறிப்பாக கடைசி 4 வாரத்தில் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால், அது எளிதில் பிரசவம் நடைபெற உதவுவதாக தெரிய வந்துள்ளது.மேலும், பேரிச்சம் பழம் கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் தடுக்கும்.