இத்தாலியில் இடம்பெற்ற கோர ரயில் விபத்து! இலங்கையர்களுக்கு பாதிப்பா?

இத்தாலி – மிலான் நகருக்கு அருகாமையில் இடம்பெற்ற கோரமான ரயில் விபத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சு குறித்த தகவலை இன்று தெரிவித்துள்ளது. மிலான் நகரில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை மேற்கோள்காட்டி வெளிவிவகார அமைச்சு இதனை கூறியுள்ளது.

வடக்கு இத்தாலியின் மிலான் நகருக்கு அருகேயுள்ள செக்ரேட் பகுதியில் பயணிகள் ரயில் திடீரென தடம்புரண்டு நேற்றைய தினம் விபத்துக்குள்ளானது.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (1)இதில் மூவர் உயிரிழந்துள்ள நிலையில், படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டவர்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தின் போது 100 பேர் வரையில் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரயில் ஓட்டுநர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் குறித்து Rete Ferroviaria Italiana நிறுவனம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.