உலகப் பணக்காரர்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பில்கேட்ஸின் மகள் ஜெனிபர் கேட்ஸ் தனது காதலருடன் அரபு நாடான குவைத்துக்கு சுற்றுலா சென்றுள்ள புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.எகிப்தை சேர்ந்த நாசர், தகுதியுள்ள குதிரை வீரர் மற்றும் ஸ்டான்போர்ட் பட்டதாரியும் ஆவார்.இவரும், மைக்ரோசொப்ட் நிறுவனரும், உலக பணக்காரர்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பில்கேட்ஸின் மகளுமான ஜெனிபர் கேட்ஸ்ம் கடந்த 1 வருடங்களாக காதலித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் அவ்வப்போது, பொது இடங்களுக்கு சுற்றுலா செல்வது வழக்கம். தற்போது இவர்கள் குவைத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு இவர்கள் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படத்தை ஜெனிபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எனக்கு பிடித்த நபருடன் 3 நாட்கள் உற்சாகமாக இருந்தது என்று பதிவிட்டுள்ளார்.குவைத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். ஆனால், பில்கேட்ஸின் மகள் தனது காதலருடன் சென்றதால், இந்த புகைப்படம் அந்நாட்டில் வைரலாகியுள்ளது.