பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் ஜாதிப் பெயரை குறிப்பிட்ட நாளிதழை, பிரபல நடிகை கஸ்தூரி காரி துப்பியது தொடர்பான வீடியோவை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இசையமைப்பாளரான இளையராஜா இசைத்துறையில் சிறப்பாக செயலாற்றியதற்காக அவருக்கு நேற்று பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வரும் நிலையில், பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று அவருடைய ஜாதிப் பெயரை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.
இதைக் கண்ட அவரது ரசிகர்கள் விருது பெற்ற செய்தியை மட்டும் வெளியிடாமல் அவரது ஜாதியின் பெயரை குறிப்பிட்டது மிகவும் கீழ்தரமான செயல் என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகையான கஸ்தூரி, செய்தியை வெளியிட்ட குறித்த நாளிதழை காரி துப்புவது தொடர்பான வீடியோவை வெளியிட்டிருப்பது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதைக் கண்ட பலரும் அவரின் செயலுக்கு வரவேற்ப்பு தெரிவித்துள்ளனர்.