மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பயந்தது போன்றே நடந்துவிட்டது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஷாஹித் கபூர் உள்ளிட்டோர் நடித்த பத்மவாத் படம் ஒருவழியாக ரிலீஸாகியுள்ளது. படத்தில்
ராணி பத்மினியை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி கர்னி சேனா உள்ளிட்ட அமைப்புகள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
ரிலீஸ் பெரும் சர்ச்சைக்கு இடையே வெளியான பத்மாவத் படம் ரசிகர்களை பெருமளவு ஈர்க்கத் தவறியுள்ளது. அழகான உடைகள் அணிந்து நடிகர்கள் வரும் ஃபேஷன் ஷோ போன்று உள்ளது என்று விமர்சனம் எழுந்துள்ளது.
பயம் பத்மாவத் டீஸர், ட்ரெய்லரை பார்த்தவர்கள் யாரும் தீபிகாவை கண்டுகொள்ளவில்லை. மாறாக ரன்வீர் சிங்கின் நடிப்பை தான் பாராட்டினார்கள். இது தீபிகாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது.
பாராட்டு பத்மாவத் படத்தை பார்த்தவர்கள் அனைவரும் ரன்வீர் சிங் தனது நடிப்பால் மிரட்டியுள்ளார் என்று அவரை தான் புகழ்கிறார்கள். தீபிகாவை யாரும் அந்த அளவுக்கு கண்டுகொள்ளவில்லை.
நாயகி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் தன் நடிப்பு தனித்து தெரியும் என்று எதிர்பார்த்த தீபிகா ஏமாற்றம் அடைந்துள்ளார். எதை நினைத்து பயந்தாரோ அது நடந்துவிட்டது. அவர் பயந்தது போன்றே ரன்வீர் தான் பெயர் வாங்கியுள்ளார்.
பன்சாலி முதல்முறையாக சஞ்சய் லீலா பன்சாலி இப்படி ஒரு மோசமாக படத்தை எடுத்துள்ளார். அவர் எடுத்த படம் இப்படி சோடை போவது அதிர்ச்சி அளிப்பதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.