பரபரப்பை ஏற்படுத்திய மனநிலை பாதிக்கப்பட்ட பெண்!

கர்கோடா பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்மனி ஒருவை அவரது குடும்பத்தினால் சங்கிலியால் பிணைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலம் மீரட்-ன் கர்கோடா பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து அப்பெண்மனியின் மருமகள் கூறுகையில் “அவரை வெளியே விட்டால், ஊர் பொதுமக்கள் அவரை மிகவும் தொந்தரவு செய்கிறார்கள். மேலும் கல்லை எறிந்து அவரை கொடுமை செய்கிறார்கள். அதனால் தான் அவரை சங்கிலியால் கட்டி வைத்துள்ளோம் என தெரிவித்தார்.

எனினும் இவ்வாறு சங்கலியால் கட்டிவைத்து கொடுமை படுத்துவது குற்றமாகும் என்பதால், காவல்துறையினர் அவரை அங்கிருந்து விடிவித்தனர்.