ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்துவதற்காக தாலிபான் தீவிரவாதிகள் நான்கு மாத குழந்தையைப் பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நகரத்தில் ஐந்து பேர் உள்ளே நுழைந்த போது, குழந்தையின் ஆடைக்குள் வெடிக்கும் பொருட்கள் அதாவது வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளதை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், நகரத்தின் உள்ளே குறித்த நபர்கள் நுழைந்த போது அவர்கள் சோதனை செய்யப்பட்டனர். அப்போது நான்கு மாத குழந்தை ஒன்றை சோதனை செய்தபோது, குழந்தையின் ஆடையில் உள்ளே வெடிப்பொருட்கள் இருந்தன.
இது தாலிபான்களின் திட்டமாகத் தான் இருக்கும், இந்த வகை வெடிபொருட்களை அவர்கள் தான் பயன்படுத்துவார்கள்.
இதன் மூலம் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது, அந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதில் ஒரு பெண்ணும் அடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் ஒரு கிராமத்தில் தாக்குதல் நடத்திய போது ஆறு பேர் இறந்தனர், இரண்டு பேர் காயமடைந்தனர்.
அதுமட்டுமின்றி ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படைகளால் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் ஏராளமான குழந்தைகள் இறந்தனர்.
மேலும் கடந்த ஜனவரி-செப்டம்பர் மாதங்களுக்கு இடையே 2,640 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 5,379 பேர் காயமுற்றனர்.
ஆயுதமேந்திய தாக்குதலில் 689 குழந்தைகள் கொல்லப்பட்டனர், 1,791 பேர் காயமுற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.