மலையகத்தை உலுக்கியுள்ள 14 வயது மாணவரின் மரணம்!

அட்டன் எபோட்சிலி பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் கழுத்தில் சுறுக்கிட்டு மரணித்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

625.500.560.350.160.300.053.800.900.160.90இந்த சம்பவம் நேற்று மலை இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தரம் 9 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய பிரசாந்தகுமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவர் பாடசாலையில் தவறொன்று இழைத்ததாகவும், அதற்காக அதிபர் மாணவரை கண்டித்துள்ளார் எனவும் பின்னர் நண்பர் ஒருவரின் தந்தையும் குறி;த்த மாணவரை நிந்தித்துள்ளார் எனவும் இதனால் மாணவர் தூக்கிட்டு மரணித்திருக்கலாம் எனவும் அட்டன் காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள மாணவர் அணிந்திருந்த காற்சட்டையின் பையின் கடிதம் ஒன்று எழுதி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் இதுவரையில் வெளிக்கொணரப்படவில்லை என்பதோடு சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.