வவுனியா கற்பகபுரம் பகுதியில் இளம் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சடலம் நேற்றுப் பிற்பகல் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கற்பகபுரம் 5ஆம் ஒழுங்கையில் வசித்து வந்த அர்ச்சுனன் கோகிலவதனி என்ற 21 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த பெண்ணின் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் இன்று காலை சிதம்பரபுரத்திலுள்ள உறவினர்களுடைய வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, வீட்டில் சகோதரனுடன் குறித்த பெண் இருந்துள்ள நிலையில் சகோதரனும் வெளியே சென்று வருவதாக தெரிவித்து விட்டு சென்றுள்ளார்.இதன்பின் அவர் மீண்டும் வீடு திரும்பிய போது சமையறையில் குறித்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அயலவர்களின் உதவியுடன் சடலத்தை மீட்டு வைத்தியசாலைக்கு எடுத்து வந்தபோதும் வைத்தியர்கள் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.பெண்ணின் உயிரிழப்பு சம்பவத்தில் சந்தேகம் காணப்படுவதாக தெரிவித்துள்ள பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.