பெண்களுக்கு விண்வெளியில் மாதவிடாய் ஏற்பட்டால்?

பெண்களின் உடம்பில் உள்ள கழிவுகள் உதிரப்போக்கின் மூலம் அகற்றும் சுழற்சி முறைதான் மாதவிடாய்.

பெண்களுக்கு ஆண்டுக்கு 11 முதல் 13 மாதவிடாய் சுழற்சி ஏற்படும். மாதவிடாய் சுழற்சியின் கால அளவு 28 நாட்கள் இருக்கும்.

ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ஏற்பட்டும் இந்த சுழற்சிமுறையை சில நாட்கள் தள்ளிப்போடுவதற்காக பெண்கள் Estrogen என்ற மாத்திரையை பயன்படுத்துவார்கள்.

இந்த மாத்திரையை, மாதவிடாய் வருவற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் பயன்படுத்தினால், மாதவிடாயை ஒரு வாரம் தள்ளிப்போடலாம். ஆனால் இந்த மாத்திரையை அதிகமாக எடுத்துக்கொண்டால் உடல்ரீதியாக சில பிரச்சனைகளை பெண்கள் சந்திக்க நேரிடும்.

இந்த மாத்திரையின் மூலம் சில நாட்கள் மட்டுமே மாதவிடாயை தள்ளிப்போட முடியும். ஆனால் விண்வெளியியில் ஓராண்டாக இருக்கும் பெண்கள் என்ன செய்வார்கள் தெரியுமா?

மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காக, லாங் ஆக்டிங் ரிவர்சிபிள் காண்ட்ரசெப்டிவ் (long-acting reversible contraceptive) என்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது 99 சதவீதம் பலனளிக்க கூடியது. மெல்லிய ப்ளாஸ்டிக் மற்றும் காப்பரினால் செய்யப்பட்ட கருவி ஒன்றை கர்பப்பையில் வைக்கிறார்கள். இதனால் கருமுட்டை உடைவது தவிர்க்கப்பட்டு, மாதவிடாய் ரத்தம் வெளியேறுவது தவிர்க்கப்படுகிறது.

இதனை மூன்று முதல் ஐந்து வருடங்கள் வரை வைத்திருக்கலாம் . இக்கருவியை கர்பப்பையிலிருந்து நீக்கிவிட்டால் வழக்கமாக மாதவிடாய் ஏற்படும்.