13 வயதான மாணவிக்கு 32 வயது நபர் மேல் ஏற்பட்ட காதல்!! நேர்ந்த விபரீதம்!!

13 வயதான பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுக்கு அமைய 32 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இமதுவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த மாணவி 50 மருந்து வில்லைகளை உண்டதை தொடர்ந்து பாரதூரமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே இந்த விசாரணை காவல்துறையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவர் தற்போது காலி – கராபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று(24) தாயும் தந்தையும் வீட்டில் இல்லாத வேளை குறித்த மாணவி மருந்து வில்லைகளை உண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இமதுவ காவல்துறை மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில், மாணவி 32 வயதான நபருடன் காதலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபரால் அம்மாணவி பல முறை வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

குறித்த சந்தேக நபர் அம்மாணவி வசித்து வந்த பகுதியில் தனது சகோதரி வீட்டுக்கு வந்துள்ள நிலையில் இந்த காதல் உருவாகியுள்ளது.

எனினும் இது தொடர்பில் அறியாத சந்தேக நபரின் சகோதரி சகோதரனுக்கு திருணம் செய்ய முற்பட்டுள்ளார்.

இது அந்த மாணவிக்கு தெரியவந்துள்ள நிலையில், சந்தேக நபரின் புதிய காதலிக்கு அந்த மாணவி தொலைபேசியில் அழைத்துள்ளார்.

இதன்போது குறித்த யுவதி அந்த மாணவியை திட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னரே அம்மாணவி மருந்து வில்லைகளை அருந்தியுள்ளார்.

சந்தேக நபர் தன்னுடன் உறவு வைத்திருந்ததாகவும் அதனை அவர் கையடக்க தொலைபேசியில் படம் எடுத்துள்ளதாகவும் அம்மாணவி கூறியுள்ளார்.

இந்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது கையடக்க தொலைபேசியையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது.

சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.