தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கிய ஸ்ரேயா, கதாநாயகியாக இருந்து, குணசித்ர நடிகையாக மாறி, தற்போது அந்த வாய்ப்பும் இல்லாமல் தெலுங்கு படங்களுக்கு முக்கியத்தும் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். மஞ்சு விஷ்ணு நடித்துள்ள காயத்ரி என்ற படத்தில் ஸ்ரேயாவும் முக்கிய கதாபாத்திரத்தலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஸ்ரேயா அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் மிகவும் கவர்ச்சியாக இருந்தது.
அந்த புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து, தற்போது அவரது ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படம் இது ஸ்ரேயா தானா என்று யோசிக்கும் விதத்தில் இருப்பது தான் ஆச்சர்யம். படத்திற்காக தான் இப்படி ஒரு புகைப்படம் என்று கூறப்படுகிறது.