இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

லண்டனில் கார் மோதி மூன்று இளைஞர்கள் இறந்ததில் ஒருவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Hayes பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் மூன்று இளைஞர்கள் நின்று கொண்டிருந்த போது, திடீரென்று அதிவேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியதில், மூவரும் இறந்துவிட்டனர்.

இந்த விபத்தை ஏற்படுத்திய நபருக்கு 28 வயது எனவும் அவர் கருப்பு நிற ஆடி கார் ஓட்டிவந்ததாகவும், பொலிசார் அவரை உடனடியாக கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இறந்த மூன்று இளைஞர்களும் அங்கு பெண் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது எனவும் மூன்று இளைஞர்களில் ஒருவரின் பெயர் Harry, George மற்றும் Josh என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதில் Harry-யின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இவரின் புகைப்படத்தை அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இந்த மூவரும் கால்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள் எனவும், விபத்திற்கு முன்னர் என்ன நடந்தது என்பது குறித்து அங்கிருக்கு சிசிடிவி கேமராவை வைத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.