9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இளம்பெண்ணின் முகம் சீரமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது
கிரீஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் முகத்தை விஞ்ஞானிகள் சீரமைத்து அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர்.
கிரீஸின் தலைநகரான ஏதென்ஸில் உள்ள அக்ரோபோலிஸ் அருங்காட்சியகத்தில் அந்த உருவம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த பெண்ணின் எலும்புகள் 1993 ஆம் ஆண்டு ஒரு குகையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. எலும்புகளை ஆராய்ந்து பார்க்கும் போது கற்காலத்தில் வாழ்ந்த 15-லிருந்து 18 வரை வயதுடைய இளம்பெண் என்பது தெரிய வந்துள்ளது.
தற்போது அந்த இளம்பெண்ணின் முகத்தை விஞ்ஞானிகள் சீரமைத்து காட்சிக்கு வைத்துள்ளனர்.
குறித்த பெண் ஸ்கர்வி நோயால் இறந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.