மற்றுமொரு பிரச்சினைக்கு ஆப்படிக்கத் தயாராகும் ஜனாதிபதி!

மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்த தகவலை ஜனாதிபதி மைத்திரி வெளியிட்டுள்ளார்.

மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படும்.

இது தொடர்பில் அடுத்தவாரம் வர்த்தமானி அறிவித்தலில் வௌியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிணைமுறியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி அமைத்த ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பான ஆணைக்குழு அமைக்கப்படும் என்று ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

அவரின் இந்தக் கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.