பார்ப்பதற்கு அழகாகவும, சுவை மிகுந்து காணப்படும் ப்ளம்ஸை பச்சையாகவும், உலர் கனியாகவும் சாப்பிடலாம், இதில் விட்டமின் சி, கே, ஏ மற்றும் நார்ச்சத்து அடங்கியுள்ளது.
பொதுவாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக இருக்கும் ப்ளம்ஸ், உறுப்புகளில் உள்ள ஆக்ஸிஜனை சிதைத்து, சூப்பர் ஆக்சைடு எதிர்மின் அயனியாக மாற்றுகிறது, கொழுப்புகளால் ஏற்படும் ஆக்ஸிஜன் இழப்பை தடுக்கிறது.
உலர்ந்த ப்ளம்சில் தாமிரம் மற்றும் போரான் போன்ற சத்துகள் அடங்கி உள்ளதால், இவை எலும்பு துளை நோய் (எலும்பு மெலிதல்) வராமல் தடுக்க உதவுகிறது.
மேலும் இதில் “இனுலின்” என்ற நார்சத்து பொருள், செரிமான பாதையில் அமில தன்மையை சுரக்கும் குடல் வாய் பாக்டீரியாவை அளிக்கும் சக்தி கொண்டது.
தாது பொருள்கள் அடங்கியுள்ள இக்கனியை எடுத்துக்கொள்வதால், உயர் இரத்த அழுத்தத்தை சரிசெய்யவும், பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்க பயன்படுகிறது.
மேலும் ப்ளம்ஸ் பழங்களில் “அந்தோசயணி” என்ற நிறமி உள்ளதால், இது மனித உடலில் உள்ள உறுப்புகளில் புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது.
ப்ளம்ஸில் விட்டமின் பி மற்றும் அதன் கூட்டு சத்துகளான விட்டமின் பி6, நியாசின், ஃபீனோலிக் அமிலம் போன்றவை உள்ளன. இவை புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளின் வளர்ச்சிதை மாற்றத்தில் பெரும்பங்கு வகிக்கிறது.
இப்படிப்பட்ட ப்ளம்ஸ் பழத்தை உண்டு வந்தால் புற்றுநோய், கண்கோளாறு, வயிறு செரிமான பிரச்சனை, கொலஸ்ட்ரால் போன்றவற்றை தடுக்கலாம்.
ப்ளம்சில் உள்ள பீட்டா கரோடின் என்ற வேதி பொருள் நுரையீரல் மற்றும் பல உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கும் வல்லமை வாய்ந்தது.
விட்டமின் ஏ கண்ணின் ஆரோக்கியத்திற்கும், தெளிவான கண் பார்வைக்கும் அவசியம். இது விழித்திரை சவ்வின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. ப்ளம்சில் உள்ள ஜீ ஷேன்தின் என்ற தாதுபொருள், கண்ணில் உள்ள ரெட்டினாவுக்கு மிக நல்லது.
நார்சத்து அதிக அளவில் உள்ளதால், எளிய செரிமானத்திற்கு ப்ளம்ஸ் உதவுகிறது. மேலும் இதில் உள்ள சோர்பிடல், இசடின் போன்றவை செரிமான மண்டலம் நன்கு செயல்பட வழிவகுப்பதோடு, மலச்சிக்கலையும் தடை செய்கிறது.
கொலஸ்ட்ராலைக் குறைக்க, ப்ளம்ஸ்-ல் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துடன் கூடிய பித்த நீரின் உதவியால், கல்லீரலானது கொலஸ்ட்ராலின் அளவை சரிசெய்து உதவுகிறது.