குழந்தைகள் வயிற்றில் இருந்தது..தாய் வயிற்றில் இல்லை: சடலமாக கிடந்த பெண்!

தமிழகத்தில் பெண் மற்றும் அவரது குழந்தைகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

குமரி மாவட்டம் நித்திரவிளை அடுத்து உள்ள வள்ளவிளை ததேயுபுரத்தை சேர்ந்தவர் விஜயதாசன். கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வரும் இவருக்கு, பேபி ஷாலினி(27) என்ற மனைவியும், சஞ்சய்(7), பியூ போபர்(5) என்ற இரு மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் விஜயதாசன் இரு வாரங்களுக்கு முன் கடல் தொழிலுக்காக கேரளா சென்றுள்ளார். இதையடுத்து இவரது மனைவி மற்றும் 2 பிள்ளைகளும் கணபதியான்கடவு பாலம் அருகே தாமிரபரணி ஆற்றில் சடலமாக கிடந்தனர்.

சம்பவத்தை அறிந்த பொலிசார் உடனடியாக வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து உறுதியான தகவல் எதுவும் தெரியாத காரணத்தினால் இது ஒரு மர்மசாவு என்று வழக்கு பதியப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று நடந்த பிரேத பரிசோதனையில் 3 பேரும் கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. சங்கீதாவின் கழுத்து எலும்புகள் உடைந்துள்ளன.

குழந்தைகள் வயிற்றில் தண்ணீர் இருந்தது. சங்கீதாவின் வயிற்றில் தண்ணீர் இல்லை. இதனால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது உறுதியாகியுல்ளது.

அதுமட்டுமின்றி முகத்தை பிளாஸ்டிக் கவரால் கட்டி, தண்ணீரில் வீசி உள்ளனர். இரு குழந்தைகளை தண்ணீரில் வீசி கொன்றுள்ளனர்.

இதனால் மர்மச்சாவு என பதிந்த வழக்கை கொலையாக மாற்றி உள்ளனர். மேலும் இது தொடர்பாக பொலிசார் அங்குள்ள 15 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.