அமெரிக்காவில் வீட்டை வாங்கிய பெண் ஒருவர் அந்த வீட்டில் மிகவும் மோசமான துருநாற்றம் வீசியதால், இதற்கு முன்னர் அங்கு வாழ்ந்தவர்கள் குறித்த தகவலை அறிந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள Rio Vista பகுதியில் உள்ள சுமார் 36 ஏக்கர் பரப்பளவு கொண்ட வீட்டை Nellie Baldwin என்பவர் வங்கி மூலம் கடந்த 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வாங்கியுள்ளார்.
அதன் பின் வீட்டில் இருந்த ஒவ்வொரு சுவர்களிலும் மிகவும் மோசமான துர்நாற்றம் வீசியுள்ளது, அதுமட்டுமின்றி அந்த வீட்டில் இருந்த அனைத்து அறைகளும் பார்ப்பதற்கே கொடூரமாக இருந்துள்ளது.
இப்படி ஒரு மோசமான வாழ்க்கையை யார் வாழ்ந்திருப்பார் என்பது குறித்து அறிய வேண்டும் என்று Nellie Baldwin இது குறித்த தகவலை சேகரித்துள்ளார்.
அந்த தகவலை கேட்டறிந்த அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். ஏனெனில் அவர் வாங்கிய வீட்டில் David மற்றும் Louise Turpin என்ற தம்பதியினர் வாழ்ந்து வாந்துள்ளனர்.
அவர்களுக்கு 13 குழந்தைகள் இருந்துள்ளனர். இவர்கள் தங்கள் பிள்ளைகளை வீட்டிற்கு வெளியில் அனுப்பாமல் ஒரு வீட்டுச் சிறை போல் குறிப்பிட்ட அறையில் இருக்க வைத்துள்ளனர். இதனால் அவர்கள் மலம் கழித்தல் போன்ற செயல்களை அந்த அறைகளிலே செய்துள்ளனர்.
அவர்களை தொடர்ந்து டார்ச்சர் செய்து குளிக்க வைக்காமல் இருந்துள்ளனர். வருடத்திற்கு ஒரு முறை மட்டும் அவர்களை குளிக்க இவர்கள் அனுமதித்துள்ளனர்.
இப்படி தொடர்ந்து கொடுமை செய்து வந்த வேளையில் 17 வயது மகன் ஒருவன் அவர்களிடமிருந்து தப்பி, பொலிசாரிடம் சென்று நடந்தவற்றை எல்லாம் கூறியுள்ளான். அதன் பின் பொலிசார் அவர்களை கைது செய்து 37 பிரிவிகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்த தகவல் தற்போது அவருக்கு தெரியவந்துள்ளதால், இப்படியும் ஒரு குடும்பம் வாழ்ந்துள்ளதா என்று அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும் அவர் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் குறிப்பிட்ட வீடு பூட்டப்பட்ட நிலையில் கிடந்தது, இதனால் இதை கடந்த 2011-ஆம் ஆண்டு வங்கி மூலம் வாங்கினேன்.
நான் வீடு வாங்குவதற்கு முன் வீட்டை வந்து பார்க்கவில்லை, வங்கியும் தன்னிடம் வீடு வாங்கிய பின்னர் உடல் உபாதைகள் தொடர்பான பிரச்சனை வந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்று என்னிடம் கையெழுத்து வாங்கியிருந்தது.
நான் அதை பெரிதாக் எடுத்துக் கொள்ளவில்லை, வீட்டையும் வங்கி முடிந்த அளவிற்கு சுத்தம் செய்து தான் கொடுத்தது. இருந்த போதிலும் வீட்டின் உள்ளே சுவர்கள் மிகவும் மோசமாக துர்நாற்றம் வீசுகிறது, இதில் இருப்பதே மிகவும் கடினம். ஆனால் இதில் சித்ரவதைகள் அனுபவித்த பிள்ளைகளுக்காக நான் தற்போது கூட பிரார்த்தனை செய்து கொள்கிறேன், அவர்கள் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.