தமிழகத்தில் போலியோ சொட்டுமருந்து!

தமிழகத்தில் போலியோ சொட்டுமருந்து முகாம், முதல் கட்டமாக இன்று(ஜன 28) நடைபெற உள்ளது.
தமிழக அரசின் சார்பில் ஓவ்வொரு ஆண்டும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கும் முகாம் நடத்தப்படுகிறது. போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தவகையில், இந்தாண்டுக்கான போலியோ சொட்டுமருந்து முகாம், முதல்கட்டமாக இன்று நடைபெற உள்ளது. இதன் மூலம் 71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்க 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்நல மையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள், உட்பட பல்வேறு இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஐந்து வயதுக்குட்டப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கெனவே சொட்டுமருந்து கொடுத்திருந்தாலும் மீண்டும் வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் முகாம், மாலை ஐந்து மணி வரை நடைபெறும். மேலும் 2ம் கட்ட போலியோ சொட்டு மருந்து மார்ச் 11ம் தேதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.