தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எதிராக ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திர குமார் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சார நிகழ்வொன்றில் நேற்றைய தினம் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் எதிராகவே அன்றிருந்த பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாயவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இதனை தமிழ் மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,