சிவனொளிபாத மலையில் கண்டுபிடிக்கப்பட்ட கால் பாத அடையாளங்கள் இரண்டு தொடர்பில் எவ்வித தொல்பொருள் சான்றுகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை என தொல்பொருளியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த இடம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை தற்போது கிடைத்துள்ளதாக அதன் இயக்குனர் ஜெனரால் பி.பீ.மண்டாவல தெரிவித்துள்ளார்.
குறித்த இடத்தில் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரிகள், இவ்வாறான பாத அடையாளங்கள் அந்த கற்பாறையின் அனைத்து இடங்களிலும் அவதானிக்க முடிவதாக குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இந்த பாத அடையாளங்களின் விசேட தன்மை என்ன என்றால் இரண்டு அடையாளங்களும் ஒரே இடத்தில் உள்ளமையாகும்.
எப்படியிருப்பினும் இந்த இடத்திற்கு அருகில் எந்தவித தொல்பொருள் சான்றுகளை காண முடியவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கமைய இந்த பாத அடையாளங்கள் தொடர்பில் மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.