தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் 1978 ஆம் ஆண்டு பிறந்தவர் நித்யானந்தா.
பிறந்த பத்தாவது நாளில் அவருக்கு ஜாதகம் கணிக்க அழைக்கப்பட்ட ஜோதிடர், குழந்தையின் கிரகசாரங்களை பார்த்து அதிசயித்து, பின்னாளில் அவர் ராஜ சன்னியாசியாக திகழ்வார் என்று கூறினாராம்.
ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி ஆகியோரை மானசீக குருவாக கொண்டு வளர்ந்த ராஜசேகரன், 12 வயதிலேயே குண்டலினி சக்தியை எழுப்பும் ஆற்றல் பெற்றதாக அவரது வாழ்க்கை வரலாறு சொல்கிறது.
இமயமலையில் உள்ள ஒரு பெரிய சாமியார் அவருக்கு பரமஹம்ச நித்யானந்தா என பெயரிட்டுள்ளார்.
விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், அரசாங்கம் பள்ளியில் தான் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயின்றுள்ளார். அதன் பின்னர் கல்லூரி படிப்பை அருணை பொறியியல் கல்லூரியில் பயின்றுள்ளார்.
படிக்கும் காலங்களில், கல்வியை விட ஆன்மீகத்தில் தான் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். ஈரோட்டில் காவிரி நதிக்கரையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவந்த அவர், அங்கிருந்து பெங்களூரு சென்று ஆசிரமம் நிறுவினார்.
பெங்களூரில் மைசூர் சாலையில் உள்ள பிடுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் நித்யானந்த தியான பீடம் என்ற பிரபலமான ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இது தான் தலைமையகம்.
உலகம் முழுவதும் 33 நாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளை துவக்கி ஆன்மிக பணிகள் ஆற்றி வருவதாக மக்கள் மத்தியில் அறியப்பட்டவர். பல தரப்பினர் மத்தியிலும் பிரபலமான இவர் ஆங்கிலம் மற்றும் தமிழில் வசீகரமாக பேசுவதிலும், எழுதுவதிலும் வல்லவர்.
நித்யானந்தா ஆசிரமத்தில் நடப்பது என்ன?
ஆசிரமம், மக்களின் குறைகளை நிறைகளாக்க, குருவின் தலைமையில் ஒன்றிணைந்து வாழும் ஆன்மீக புனித தலம் என்று அழைக்கப்படுகிறது.
தியானமும், மனத்தைக் கட்டுபடுத்தும் கலையும் இங்குள்ளவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது. தொடர் பயிற்சிகளின்மூலம் ஆன்மீக அறிவை வளர்ப்பதே இவர்களின் நோக்கம் என்று கூறுகிறார்கள் நித்யானந்தாவின் சீடர்கள்.
33 நாடுகளில் 1200 மையங்களுடன் இயங்கும் அவரது தியானபீடங்களில் ஏராளமானவர்கள் தங்கி பயிற்சி பெறுகின்றனர். கல்லூரிகளில் பல பாடத் திட்டங்கள் இருப்பது போல நித்யானந்தா தியான பீடங்களிலும் பல தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்கென கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது.
நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் மொத்தம் 8,500 பெண்கள் இருக்கிறார்கள்
தமிழகத்தை சேர்ந்தவர்கள் 1300,
மீதமுள்ளோர் வெளிமாநிலமும், சில வெளி நாட்டுப் பெண்களும்.
15 வயதுக்கு கீழே உள்ள பெண்கள் 300
30 வயதை கடந்தோர் 2,037
மீதமுள்ள அனைவரும் இடைப்பட்ட வயதினர்.
பகுதி நேர சீடர்கள் 413 (ஆண்கள்)
முழு நேர சீடர்கள் 87 (ஆண்கள்)
இதில் 90% ஆண்கள் பிராமணர்கள்,
10% வெளிநாட்டு செல்வந்தர்கள்
8,500 பெண்களில் பிராமணரல்லாத பெண்கள் 97%.
பிராமண பெண்கள் 3% மட்டும் ( நிர்வாக பணிகள் மட்டும்) இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.