அதே பாதுகாப்பு அதே தெனாவட்டு: மகிந்த ராஜபக்ஷ …

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் தாமரை மொட்டுச் சின்னத்தில் காத்தான்குடி நகர சபைக்குப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். 2015 ஜனவரி நடந்த தேர்தலில் அவர் தொல்வியை தழுவியதும். அதன் பின்னர் அவர் சுருண்டு விட்டதாகவும் பல தமிழர்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நாட்டில் நல்லாட்சி நிலவுவதாக, மேலும் சிலர் தமிழர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் சிங்கள மக்களிடையே உள்ள ஒற்றுமை இன்றுவரை ஒரு துளியும் குறையவில்லை. மகிந்த ராஜபக்ஷவை இன்றும் ஒரு ஜனாதிபதி ரேஞ்சில் தான் அன் நாட்டு அரசு வைத்திருக்கிறது. சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு. 2 அடுக்கு பொலிஸ் பாதுகாப்பு. குண்டு துளைக்காத மேர்சைடிஸ் பென்ஸ் கார் என்று சகல வசதிகளோடு ராஜ வாழ்க்கை வாழ்கிறார் மகிந்த.

இதில் நமால் மீது விசாரணை, கோட்டபாயவை 6 மணி நேரம் விசாரித்தார்கள் என்றும். விரைவில் மகிந்த கைதாவர் என்றும், கண் துடைப்புக்காகவும். வெளிநாட்டு தமிழர்களின் திருப்த்திக்காகவும் அடிக்கடி பல செய்திகளை இலங்கை  புலனாய்வு வேண்டும் என்றே கசிய விடுகிறது. இதனை வாசிக்கும் பலர் அதனை நம்பி விடுவதும் உண்டு. என்றோ ஒரு நாள் அவருக்கு தண்டனை கிடைக்கும் என்று சில தமிழர்கள் காத்துக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் என்றுமே சிங்கள அரசு, அவரை காட்டிக் கொடுக்க தயாராக இல்லை என்பது தான் உண்மை. அவர்கள் ஒற்றுமையால் அவர்கள் வென்றார்கள் என்றால் , அது தான் உண்மை…