தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா இரண்டு கோடி ரூபா அபிவிருத்திப் பணிகளுக்காகவே வழங்கப்பட்டதாகவும் இலஞ்சமாக அவை வழங்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்ட பணம் தொடர்பில் அரசியல் மேடைகளில் தொடர்ந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.