இலஞ்சம் பெற்­ற­தாகக் கூறு­வது உண்­மைக்குப் புறம்­பா­னது!

நல்­ல­பி­ப்­பி­ரா­யத்தை திட்­ட­மிட்டு சிதைக்கும் கபட நோக்கம் என்­கிறார் –சுமந்­திரன் எம்.பி.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வாக்­குப்­பலம் இத்­தேர்­தலில் சிறிதும் குறை­வ­டை­யாது என்­பதே எங்கள் எதிர்­பார்ப்பு. மக்கள் எதிர்­பார்த்த விட­யங்கள் நிறை­வே­றாமல் இருந்­தாலும் கூட, ஒன்­றுமே நடக்­க­வில்லை என எவ­ராலும் கூற­இ­ய­லாது.

சில விட­யங்கள் தொடர்பில் நாங்­களும் எங்­க­ளது எதிர்ப்பை தொடர்ச்­சி­யாக அர­சாங்­கத்­திடம் தெரி­வித்து வரு­கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான எம்.ஏ.சுமந்­திரன் கூறினார்.

தற்­போ­தைய அர­சியல் சூழ்­நிலை குறித்து அவர் வழங்­கிய செவ்­வியில் தெரி­வித்தார்.

எமக்கு இலஞ்­சமோ வேறு எந்­த­வி­த­மான பணமோ வரவு – செலவுத் திட்­டத்தை ஆத­ரிப்­ப­தற்கு கொடுக்­கப்­ப­ட­வில்லை. அது முற்­றிலும் உண்­மைக்குப் புறம்­பான குற்­றச்­சாட்டு என்றும் அவர் கூறினார்.

மேலும் அவர் கூறு­கையில்,

அனைத்துப் பாரா­ளு­மன்ற உறு­ப­பி­னர்­க­ளுக்கும் அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் அபி­வி­ருத்திப் பணி­களில் எதற்கு முன்­னு­ரிமை கொடுக்­க­வேண்­டு­மென்று முன்­மொ­ழி­கின்ற உரித்து கொடுக்­கப்­பட்­டுள்­ளது. அண்­மையில் யாழ். மாவட்ட செய­லாளர் கூறி­யதைப் போன்று கடந்த வரு­டத்தின் நடுப்­ப­கு­தியில் வடக்கு, கிழக்­குக்கு கூடு­த­லாக நிதி ஒதுக்­கப்­ப­ட­வேண்டும் என்று கூறப்­பட்­டது.

அத்­துடன் யாழ்ப்­பாண அபி­வி­ருத்­திக்­கென பிர­த­மரின் அமைச்­சி­னூ­டாக 310 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்­தி­ருந்தார்.

ஒவ்­வொரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் என்­னென்ன தேவை­க­ளுக்கு அதை உப­யோ­கப்­ப­டுத்­தலாம் என்று சில முன்­மொ­ழி­வு­களை செய்­ய­வேண்டும் என்று கோரப்­பட்­டது. நாங்­களும் அதைத்தான் செய்தோம். இதனால் நிதி யாரு­டைய கைக்கும் வரப்­போ­வ­தில்லை. அர­சாங்கம் நிதியை எம்­மு­டைய கைக­ளுக்குக் கொடுத்து அபி­வி­ருத்திப் பணி­களை செய்யச் சொல்­வதும் இல்லை.

நேர­டி­யாக மாவட்ட செய­லகம் மூல­மாக மேற்­கொள்ளும் அபி­வி­ருத்திப் பணி­களில் எந்­தெந்த பணி­க­ளுக்கு முன்­னு­ரித்து கொடுக்­க­வேண்டும் என்று முன்­மொ­ழி­கின்ற உரித்தை மக்­களால் தெரி­வு­செய்­யப்­பட்ட பிர­தி­நி­தி­க­ளுக்குக் கொடுப்­பார்கள்.

வரவு – செலவுத் திட்­டத்­துக்கும் இதற்கும் சம்­பந்தம் இல்லை. வரவு – செலவுத் திட்­டத்­துக்கு பல மாதங்­க­ளுக்கு முன்­னரே இது நடந்­தது. இதை வைத்­துக்­கொண்டு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வரவு – செலவுத் திட்­டத்­துக்கு ஆத­ரவு வழங்­கி­ய­தற்­காக அர­சாங்­கத்­திடம் இருந்து 2 கோடி ரூபா இலஞ்சம் பெற்­றுள்­ளனர் என்ற பிர­சாரம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இது மக்­க­ளுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மீதுள்ள நல்ல அபிப்­பி­ரா­யத்தை சிதைப்­ப­தற்­காக வேண்­டு­மென்றே ஏற்­ப­டுத்­தப்­பட்ட ஒரு நிகழ்ச்சி நிர­லாகும். தம்­மு­டைய சட்­ட­வி­ரோத ஊழல் நட­வ­டிக்­கை­களை மூடி மறைப்­ப­தற்கு எவ்­வித அடிப்­ப­டையும் இல்­லாத பொய்க்­குற்­றச்­சாட்­டுக்கள் எம்­மீது சுமத்­தப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.

எம்­மீது இப் பொய்க்­குற்­றச்­சாட்டை சுமத்­திய குறித்த நபர் பல வரு­டங்­க­ளாக அர­சுக்குச் சொந்­த­மான அடுக்­கு­மா­டிக்­கட்­ட­டத்தை எவ்­வித வாட­கையும் செலுத்­தாமல் சட்­ட­வி­ரோ­த­மாக தன்­னு­டைய கையி­ருப்பில் வைத்­தி­ருந்தார். மிக அண்­மையில் தேர்தல் ஆணை­யகம் உத்­த­ர­விட்ட பின்­னரே அது அர­சாங்­கத்­திடம் கைய­ளிக்­கப்­பட்­ட­தாக எங்­க­ளுக்கு தெரி­ய­வந்­துள்­ளது என்றும் அவர் விளக்­கினார்.

தொடர்ந்து அவர் கூறு­கையில்,

அர­சி­ய­ல­மைப்புப் பணி­களும் தேர்­தல்­களும்

எந்தத் தேர்­த­லுக்கு முன்னும் அர­சி­ய­ல­மைப்புச் சட்டம் உரு­வாக்­கப்­பட வேண்டும். அதற்­கான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பைத் தான் முதன்­மு­தலில் நடத்­த­வேண்டும் என்­ப­துதான் எங்­க­ளு­டைய நிலைப்­பா­டாக இருந்­தது. ஏனைய கட்­சிகள் கூட அதே நோக்­கத்தில் தான் இருந்­தன.

ஆனால், அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கப் பணியும் ஏனைய செயற்­பா­டு­களைப் போன்று இழுத்­த­டிக்­கப்­பட்டு வந்து, அதுவும் அரை­வாசித் தூரம் கடந்­து­விட்ட நிலை­யில்தான் இவ் உள்­ளூ­ராட்சித் தேர்தல் குறிக்­கிட்­டுள்­ளது.

தேர்­தல்­க­ளுக்கு முதல் அர­சி­ய­ல­மைப்புப் பணி முடி­வு­ற­வேண்டும் என்று நாங்கள் எதிர்­பார்த்­த­மைக்கு காரணம் நல்­லாட்சி அர­சாங்­கத்தில் பிர­தா­ன­மாக அங்கம் வகிக்­கின்ற கட்­சிகள் ஒன்­றாக இருக்கும் நிலையே அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­துக்கு சிறந்­த­தாகும்.

தேர்தல் என்று வந்தால் அவ்­விரு கட்­சி­களும் ஒன்­றோடு ஒன்று போட்டி போட்­டுக்­கொள்ளும். இதனால் சில­வேளை நல்­லி­ணக்க அர­சாங்கம் உடைந்து விழக்­கூ­டிய சாத்­தியக் கூறுகள் காணப்­ப­டலாம் என்றே அர­சி­ய­ல­மைப்புப் பணி­களை விரை­வு­ப­டுத்­த­வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருந்தோம்.

ஆனால், நல்­லாட்சி அர­சாங்கம் இன்­றைக்கு அல்­லது நாளைக்கு உடையும் என்று தென்­பட்­ட­போ­திலும், தற்­போது நடை­பெறும் விட­யங்­களை வைத்துப் பார்த்தால், எவ்­வ­ளவு தான் இரு கட்­சி­க­ளுக்­கி­டையில் முறுகல் நிலைகள் வந்­தாலும் தேசிய அர­சாங்கம் உடைந்து விழாது இரு கட்­சி­களும் ஒன்­றா­கவே இருக்கும் என்­பது தெளி­வா­கின்­றது.

ஆன­ப­டி­யினால் தேர்தல் முடிந்­த­பின்னர் உட­ன­டி­யாக அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­ணிகள் நடை­பெ­ற­வேண்டும் என்­பதே எங்­களின் நிலைப்­பாடு.

உப­கு­ழுக்­களின் அறிக்கை தொடர்­பான விவா­தத்­துக்கு இன்னும் திக­திகள் நிர்­ண­யிக்­கப்­ப­ட­வில்லை. ஆனால், முன்­னைய விவா­தங்கள் நடை­பெற்­ற­பின்னர் வழி­ந­டத்தல் குழு ஒன்­று­கூடி அர­சி­ய­ல­மைப்­புக்­கான வரைபை தயா­ரிக்­கலாம் என நிபு­ணர்­க­ளுக்கு பணித்­துள்­ளது. ஆகவே, உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் முடி­வுற்ற பின்னர் அவர்­க­ளு­டைய வரைபு தயா­ராக இருக்கும் என நம்­பு­கின்றோம் என்றார்.

கேள்வி: லண்­டனில் நீங்கள் பேச­வி­ருந்த கூட்டம் திடீ­ரென இரத்­தா­ன­தாக கூறப்­பட்­டதே அது குறித்த உங்கள் கருத்­தென்ன?

பதில்: கடந்த 17 ஆம் திகதி பிணை­முறி சம்­பந்­த­மான அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வி­ருந்த கார­ணத்­தினால் எனது லண்டன் பய­ணத்தை பிற்­போட்­டி­ருந்தேன். ஆனாலும், கூட்டம் நடை­பெ­ற­வி­ருந்த நேரத்தில் அங்கு சமு­க­ம­ளிக்கக் கூடிய நிலையே காணப்­பட்­டது.

எனினும், நான் அவர்­க­ளுக்கு அனுப்­பிய செய்­தியில், கூட்டம் பிற்­போ­டப்­பட்­டுள்­ளது எனத் தெரி­வித்­தி­ருந்தேன் அதை வைத்து நான் உரிய நேரத்­திற்கு வர­மாட்டேன். அதனால் கூட்­டத்­திற்கு சமு­க­ம­ளிக்க மாட்டேன் என்று கூட்­டத்தை இரத்து செய்­து­விட்­டார்கள்.

அதன் கார­ண­மா­கவே கூட்டம் இரத்துச் செய்­யப்­பட்­டது. எந்த எதிர்ப்பின் கார­ண­மா­கவும் கூட்டம் இரத்துச் செய்­யப்­ப­ட­வில்லை. பொது­வாக இங்­குள்ள எல்லா ஊட­கங்­களும் இது தொடர்பில் கூட்­டத்தை இரத்துச் செய்த எங்­க­ளிடம் கேட்­காமல், எதிர்­பார்ப்­பாட்­டங்­க­ளாலும் அநோ­மா­தேய சுவ­ரொட்­டிகள் கார­ண­மா­கவும் கூட்டம் இரத்துச் செய்­யப்­பட்­ட­தாக செய்­தி­களை வெளி­யிட்­டி­ருந்­தார்கள்.

மேலும், கன­டாவில் மூன்று கூட்­டங்கள் நடை­பெற்­றன. அதில் கலந்­து­கொண்­டுள்ள புலம்­பெயர் அமைப்­புக்கள் தமிழ்த் தேசியக் ௬ட்­ட­மைப்பு தமிழ் மக்கள் தொடர்பில் கொண்­டுள்ள நிலைப்­பாட்டை வர­வேற்­றன என்றார்.

உள்­ளூ­ராட்சித் தேர்தல் தொடர்பில் அவர் கூறு­கையில்,

உள்­ளூ­ராட்சித் தேர்தல் என்­பது உள்ளூர் விட­யங்கள் சம்­பந்­த­மா­னது. ஆனால் எங்­க­ளுக்கு எதி­ராக தேர்­தலில் போட்­டி­யிடும் பலர் இடைக்­கால அறிக்­கையை நிரா­க­ரிக்கும் தேர்­த­லாக இதைப் பயன்­ப­டுத்­துங்கள் என்­றெல்லாம் அறிக்கை விட்­டுக்­கொண்­டி­ருப்­பதால் நாங்கள் இது பற்றி விளக்கம் சொல்­லி­யி­ருக்­கின்றோம்.

அதா­வது இடைக்­கால அறிக்­கையில் நாங்கள் எவ்­வ­ளவு தூரம் முன்­னே­றி­யி­ருக்­கின்றோம்? என்று மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­தல்­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்றோம். மேலும் ஒற்­றை­யாட்சி இலங்­கைக்கு பொருத்­த­மற்­றது என்று இடைக்­கால அறிக்கை கூறு­கின்­றது.

அது பற்­றியும் அதன் உள்­ள­டக்கம் பற்­றியும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஆகவே அதை நிரா­க­ரிக்­க­வேண்­டிய தேவை இல்லை. அதை வர­வேற்­க­வேண்­டிய தேவையே மக்­க­ளுக்கு இருக்­கின்­றது. ஆகவே, அவர்கள் கூறிய கார­ணத்தால் இடைக்­கால அறிக்­கையை நிரா­க­ரிப்­ப­தற்கு இத் தேர்­தலை நிரா­க­ரி­யுங்கள் என்று ௬று­வதில் எவ்­வித அர்த்­தமும் இல்லை. இவர்கள் இவ்­வாறு தெரி­விப்­பதால் தீர்வு விட­யங்கள், இடைக்­கால அறிக்கை போன்ற விட­யங்கள் தொடர்பில் மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்தி வரு­கின்றோம்.

கேள்வி: காணா­மல்­போனோர் பற்­றிய அரசின் கரி­சனை எவ்­வா­றுள்­ளது?

பதில்: காணா­மல்­போ­னோ­ருக்­கான அலு­வ­ல­கமே காணா­மல்­போனோர் தொடர்­பான பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்­கான பொறி­முறை. அது அனை­வ­ராலும் ஏற்றக்கொள்ளப்பட்ட விடயம்.

அதுதான் சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதி. சர்வதேச நிபுணர்கள் மூலமே அவ்வலுவலகத்தை அமைப்பதற்கான சட்டங்களும் தயாரிக்கப்பட்டன. சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, அவை ஒருவருட காலமாக நடைமுறைப்படுத்தாமல் அரசாங்கம் இழுத்தடித்தது உண்மை. அக்காலகட்டத்தில் நாங்கள் அரசாங்கத்திற்கு பலதடவைகள் அழுத்தங்களைக் கொடுத்துள்ளோம்.

ஆனால், சென்ற வருட இறுதியிலிருந்து இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது இதற்கு ஆணையாளர்களும் அரசியலமைப்புக்குழுவால் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே, அந்த அலுவலகம் உடனடியாக நடைமுறைக்கு வரவேண்டும்.

அதை நடைமுறைப்படுத்த சென்ற வரவு – செலவுத் திட்டத்தில் 2018 ஆம் ஆண்டுக்கு மாத்திரம் 1400 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமான நிதி அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே, அது விரைவில் செயற்படுத்தப்படும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.