பிணை­முறி மோசடி! -சபா­நா­ய­க­ருக்கு நாளை அறி­விக்க முடிவு

நல்­லாட்சி தேசிய அர­சாங்­கத்­துக்குள் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் சுதந்­திரக் கட்­சிக்கும் இடை­யி­லான இரு­த­ரப்பு மோதல்கள் கடு­மை­யா­கி­யுள்­ளன. ஜனா­தி­ப­தியின் சவா­லுக்கு பதில் அளிக்கும் வகையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிணை­முறி மோசடி அறிக்கை மீதான விவா­தத்தை உள்­ளூ­ராட்சி ­மன்றத் தேர்­த­லுக்கு முன்னர் நடத்­து­வ­தாக தெரி­வித்­துள்ளார்.

இலங்கை மத்­திய வங்கியின் சர்ச்­சைக்­கு­ரிய பிணை­முறி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­களின் மீதான விவாதம்

எதிர்­வரும் 8 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை நடத்­தப்­படும். இதற்­காக பாரா­ளு­மன்­றத்தை கூட்­டு­வ­தற்­கான கடி­தத்தை நாளை திங்கட் கிழமை சபா­நா­ய­க­ருக்கு அனுப்பி வைக்­க­வுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறி­வித்­துள்ளார் .

காலி – தெனி­யாய பகு­தியில் நேற்று இடம்­பெற்ற மக்கள் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க குறித்த திக­திக்கு முன்னர் பாரா­ளு­மன்­றத்தை கூட்டி சர்ச்­சைக்­கு­ரிய இரண்டு விசா­ரணை அறிக்­கைகள் மீதான விவா­தத்தை நடத்­து­வ­தாக குறிப்­பிட்டார்.

இலங்கை மத்­திய வங்கி பிணை­முறி அறிக்கை தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழு மற்றும் பாரிய ‍ஊழல் மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­களின் மீதான விவா­தத்தை பெப்­ர­வரி மாதம் 20 மற்றும் 21 ஆம் திக­தி­களில் நடத்­து­வ­தற்கு கடந்த 24 ஆம் திகதி புதன் கிழமை இடம்­பெற்ற கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.இதன்­படி குறித்த இரு தினங்­க­ளிலும் பிற்­பகல் 1 மணி தொடக்கம் 6 மணி வரை விவா­திப்­ப­தற்கு முடிவு செய்­யப்­பட்­டது.

அத்­துடன் பிணை­முறி மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழு அறிக்­கையின் 103 பக்­கங்கள் குறை­வ­டைந்­தமை தொடர்­பாக ஏற்­பட்ட சிக்கல் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கட்சித் தலை­வர்­களை பிரத்­தி­யே­க­மாக சந்­தித்து அறி­வு­றுத்­து­வ­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

மேலும் பாரா­ளு­மன்­றத்தின் புதிய ஒழுக்­கங்கள் மற்றும் நிலை­யியற் கட்­டளை மறு­சீ­ர­மைப்பு தொடர்பில் பெப்­ர­வரி மாதம் 19 ஆம் திகதி பேச்­சு­வார்த்தை நடத்­தவும் இணக்கம் காணப்­பட்­டது.

மேலும் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த­லுக்கு முன்னர் விசா­ரணை அறிக்­கைகள் மீதான பாரா­ளு­மன்­றத்தை நடத்தி காட்­டு­மாறு கடந்த வியா­ழக்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாணந்­து­றையில் இடம்­பெற்ற கூட்­டத்தில் சவால் விடுத்­தி­ருந்தார்.

நல்­லாட்­சியில் உள்ள இரு­பக்க திரு­டர்­களும் விவா­தத்தை காலம் கடத்­தி­யுள்­ள­தா­கவும் இதன் போது ஜனா­தி­பதி கடு­மை­யாக சாடி­யி­ருந்தார்.

மறு புறம் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த­லுக்கு முன்னர் பிணை­முறி மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி விசா­ரணை மீதான அறிக்கை மீதான பாரா­ளு­மன்ற விவா­தத்தை நடத்த வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் சபா­நா­ய­க­ருக்கு கடிதம் அனுப்பி கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

இவ்­வா­றா­ன­தொரு நிலையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த­லுக்கு முன்னர் சர்ச்­சைக்­கு­ரிய இரண்டு விசா­ரணை அறிக்­கைகள் மீதான பாராளுமன்ற விவாதத்தை நடத்துவது குறித்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

இதற்கான உத்தியோக பூர்வ கடிதத்தை நாளை சபாநாயகருக்கு அனுப்பி வைக்க உள்ளார். அதன் பின்னர் சபாநாயகர் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அவசரமாகக் கூட்டி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தும் திகதி குறித்து இறுதி தீர்மானத்தை அறிவிப்பார்.